tamilnadu

img

மக்களவைத் தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள்!

சென்னை, ஏப்.18- தமிழகம் - புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும்  ஒரே கட்டமாக வெள்ளியன்று தேர்  தல் நடைபெறுகிறது. இந்த நிலை யில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடு களை தேர்தல் ஆணையம் செய்து  வருகிறது. இந்த தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல்  அதிகாரி சத்யபிரதா சாகு செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் மொத்தம் 68  ஆயிரத்து 321 வாக்குச் சாவடி களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அடையாள மை  உள்ளிட்டவை அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.

அதேபோல் ஒவ் வொரு வாக்குச்சாவடிக்கும் உரிய  போலீசாரும், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடு படுகின்றனர். இந்த வாக்குச்சாவடி களில் மிக பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்பட 44 ஆயிரத்து 800 வாக்குச் சாவடிகளில் வெப்  கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு நடைபெறும் வாக்குப்பதிவுகள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங் களில் ஏதாவது கோளாறு ஏற்பட் டால் அதைச் சரி செய்வதற்காக 10  வாக்குச்சாவடிக்கு ஒரு மண்டலக்  குழு என்ற வீதத்தில் 6 ஆயிரத்து 137 மண்டல குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவினர் உடனடி யாகச் சென்று, பழுதுபார்த்துக் கொடுப்பார்கள். பழுது பார்க்க முடி யாத இயந்திரங்களாக இருந்தால்  புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்  படும். வாக்குப் பதிவின்போது ‘விவி பேட்’ இயந்திரத்தில் தவறான ஓட்டு  காண்பிக்கப்படுவதாக இருந்தால், அந்த வாக்குச் சாவடியின் தலைமை  அதிகாரியிடம் யார் வேண்டுமானா லும் முறையிடலாம். புகாரில் உண்மை  இருந்தால் அந்த இயந்திரம் மாற்  றப்படும். புகார் தவறாக இருந்தால்  புகார் அளித்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்.

தனது ஓட்டை யாராவது கள்ள  ஓட்டு போட்டு விட்டால் அதுபற்றி யும் தலைமை அதிகாரியிடம் முறை யிடலாம். அவரிடம் ஓட்டளிப்பதற் கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்த பின்னர் வாக்குச்சீட்டில் டெண்டர் ஓட்டு போடலாம். அந்தச்  சீட்டை கவரில் போட்டு தனியாக  வைப்பார்கள். ஓட்டு எண்ணிக்கை யின்போது வெற்றி தோல்விக்கு ஓரிரு வாக்கு வித்தியாசம் வந்தால்  இந்த டெண்டர் ஓட்டு எண்ணிக் கைக்கு எடுத்துக் கொள்ளப்படும். தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளும் தயார் நிலை யில் உள்ளன.

முதியோர், மாற்றுத்  திறனாளிகள், கர்ப்பிணிப் பெண் களுக்காக சாய்வுத் தளம் செய்து தரப்பட்டு உள்ளது. அவர்கள் வரி சையில் காத்திருக்கத் தேவை இல்லை. கன்னியாகுமரி மாவட்டம் விள வங்கோடு இடைத்தேர்தலில் வாக் காளர்கள் ஓட்டுப் போடும்போது முதலில் சட்டப்பேரவைத் தொகு திக்கு விரலில் மை வைக்கப்படும்.  அடுத்ததாக நாடாளுமன்றத் தேர்  தல் வாக்குப் பதிவுக்காக இன்னொரு  விரலில் மை வைக்கப்படும். இந்தத் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக விழிப்பு ணர்வு பிரச்சாரம் நிறைய செய்து உள்ளோம்.  இவ்வாறு சத்யபிரதா சாகு கூறினார்.

சிபிஎம் தலையீட்டால்  அதிகரித்த வாக்குப் பதிவு

அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்  றும் அலுவலர்கள் தேர்தல் பணி யில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் அஞ்சல் வாக்குகளைச் செலுத்துதற்கு  கூடுதல் அவகாசம் வேண்டும் என்று  தமிழ்நாடு தலைமை தேர்தல் அதி காரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார் பில் கடிதம் வழங்கப்பட்டது.

இதை ஏற்று கூடுதலாக ஒரு  நாள் (ஏப்ரல் 18 வரை) அவகாசம் வழங்கப்பட்டதால் அஞ்சல் வாக்குப் பதிவு சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அதன்படி 39 தொகுதிகளிலும் மொத்தம் 94 ஆயிரம் வாக்குகள் பதி வாகியுள்ளன. இந்த வாக்குகள்  பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாவட்  டங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு டன் திருச்சியில் இருந்து அனுப்பி  வைக்கப்பட்டது. இதில் அதிகபட்ச மாக தென் சென்னை தொகுதிக்கு  தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து அதிகபட்சமாக 5 ஆயிரத்து  445 அஞ்சல் வாக்குகள் பதிவாகி இருந்தன. குறைந்தபட்சமாக கன்னியா குமரி தொகுதிக்கு 434 அஞ்சல் வாக்கு கள் பதிவாகி இருந்தன.

பொள்ளாச்சி தொகுதிக்கு பிற  மாவட்டங்களில் இருந்து ஒரு அஞ்  சல் வாக்கு கூட பதிவாகவில்லை.  தொகுதி வாரியாக பதிவான வாக்கு கள் விவரம்:

திருவள்ளூர் - 4547, வட சென்னை - 4023, மத்திய சென்னை -  3,639, ஸ்ரீபெரும்புதூர் - 3385, காஞ்சி புரம் - 949, அரக்கோணம் - 926,  வேலூர் - 1863, கிருஷ்ணகிரி - 6984,  தருமபுரி-597, திருவண்ணாமலை- 6551, அரணி-889, விழுப்புரம்-798,  கள்ளக்குறிச்சி - 2243, சேலம் - 4961,  நாமக்கல் - 1516, ஈரோடு - 2908, திருப்  பூர் - 4947, நீலகிரி - 1450, கோவை  - 4545, திண்டுக்கல் - 1254, கரூர் -  2970, பெரம்பலூர் - 3028, கடலூர்  - 2322, சிதம்பரம் - 2819, மயிலாடு துறை - 1408, நாகப்பட்டினம் - 1814,  தஞ்சாவூர் - 1812, சிவகங்கை - 3167,  மதுரை - 3552, தேனி - 500, விருது நகர் - 2524, இராமநாதபுரம் - 1948, தூத்  துக்குடி - 1667, தென்காசி - 1879, திரு நெல்வேலி - 2303, கன்னியாகுமரி - 434.

;