tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ரேபரேலியில் ராகுல் காந்தி வேட்புமனு

ரேபரேலி, மே. 03- ரேபரேலி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப் பட்ட ராகுல் காந்தி வெள்ளி யன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத்தாக்கலின் போது ராகுல் காந்தி யின் தாயும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் தேசியத் தலை வர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளரும், ராகு லின் சகோதிரியுமான பிரி யங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராகுல் காந்தி  ஏற்கெனவே கேரள மாநி லம் வயநாட்டிலும் போட்டி யிடுகிறார். வயநாட்டில் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மே 6-இல்  +2 முடிவுகள்
சென்னை, மே 3 - தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22- ஆம் தேதி வரை நடை பெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளி களில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து  550 மாணவர்கள், 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்தேர்வர்கள் தேர்வை எழுதினர். மாநிலம் முழு வதும் 75 மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் தேர்வு முடி வுகள் திட்டமிட்டபடி மே 6  அன்று வெளியிட தயார் நிலையில் உள்ளது என்று பள்ளி கல்வித்துறை தெரி வித்துள்ளது.

1,163 பேர்  டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு

சென்னை, மே 3- தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் கடந்த மார்ச் 8 முதல் ஏப்ரல் 30 வரை யிலான காலத்தில் ஒருங்கி ணைந்த குடிமைப் பணிகள் தேர்வு மூலம் குரூப் 1-இல் அடங்கிய பதவிகளுக்கு 94 பேரும், குரூப் 2-இல் அடங்கிய பதவிகளுக்கு 47 பேரும், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகள் அடங்கிய பதவி களுக்கு 851 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், தொகுதி-5ஏ தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 165 பேர் என பல்வேறு துறை களில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப மொத்தம் 1,163 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளதாக டிஎன்பி எஸ்சி தெரிவித்துள்ளது.

;