tamilnadu

பயிர்களை பாதுகாத்திட 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கிடுக : விவசாயிகள் சங்கம்

சென்னை, மே 7- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. வழக்கத்தை விட தமிழ்நாட்டில் மின்  உபயோகத்தின் தேவையும் அதி கரித்துள்ளது. நாள் ஒன்றிற்கு சுமார் 21 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி  மின் தேவை ஏற்பட்டுள்ள சூழலில்,  இந்த தேவையினை முன் கூட்டியே சரி யாக மாநில மின்சார வாரியம் திட்ட மிட்டு அதற்கான முன் ஏற்பாடுகளை செய்யாததால், தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்சார வெட்டு தொடர் கதையாகி வருகிறது.

குறிப்பாக கோடை சாகுபடி செய்யப் பட்டுள்ள நெற்பயிர்கள், பருத்தி, உளுந்து உள்பட அனைத்து பயிர் களும் தண்ணீரின்றி பல பகுதிகளில் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட காலப் பயிர்களாக உள்ள தென்னை பல ஆயிரம் ஏக்கரில் காய்ந்து வரு கிறது. இதற்கு அடிப்படையான காரணம், விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் தினந்தோறும் 12 மணி நேரம் வழங்கப்பட்டதில், கடந்த 15 தினங்களாக 6 மணி நேரத்தி லிருந்து அதிகபட்சமாக 9 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படு கிறது. சில இடங்களில் 3 அல்லது 4 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. 

மாநிலத்தில் மற்ற மாவட்டங் களுக்கு 14 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கினால் “டெல்டா” மாவட்டங்களுக்கு தினந்தோறும் 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பதற்கான சிறப்பு அரசாணை உள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கும் தற்போது மற்ற மாவட்டங்களுக்கு கிடைப்பதைப் போல் தான் மின்சாரம் கிடைக்கிறது. எனவே, டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு அரசாணைப்படியும், மற்ற இடங்களுக்கு தினந்தோறும் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுகிறோம். 

எந்தெந்த நேரத்தில் மின் விநியோ கம் வழங்கப்படும் என்பதை உறுதிப் படுத்தி பட்டியல் வெளியிட வேண்டும். மேலும் அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் ஏற்படுவதால் அடிக்கடி மின்மாற்றிகள் பழுதடையும் நிலையும்  ஏற்படுகிறது. இவ்வாறு பழுதடை யும் மின்மாற்றிகளை உடனுக்கு டன் மாற்றுவதற்கான நடவடிக்கை களையும் மின்சார வாரியம் மேற் கொள்ள வேண்டும். 

மேலும் ஜூன்  மாதம் வரை கோடை வெயிலின்தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் பல இடங்களில் குடிதண்ணீருக்கும் மும்முனை மின்சாரம் கிடைக்காததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவரு வதை அரசு கவனத்தில்கொண்டு, மத்திய தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டிற்கு கூடுதலான மின்சாரத்தை பெறு வதற்கும், தமிழ்நாட்டில் தற்போது அதிகரித்துள்ள  மின் தேவையை கருத்தில் கொண்டு அண்டை மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்து மாநிலம் முழுவதும் தட்டுப்பாடின்றி மின்சாரம் வழங்கிட தமிழ்நாடு அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

;