tamilnadu

img

அரசின் அறிவிப்பை மீறி எம்.டெக்., படிப்பு? மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.

சென்னை, ஏப்.26- சேலம் பெரியார் பல்க லைக் கழக துணைவேந்தர் ஜெகநாதன், தனியார் நிறுவன மான பூட்டர் பவுண்டேஷன் மற்றும் பூட்டர் பார்க் நிறுவ னங்கள் மூலம் பயிற்சிக் கல்வி  பாடத்திட்டம் வழங்குவது தொடர்பாக பல தனியார் நிறு வனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதன் மூலம்  மோசடி மற்றும் முறைகேட் டில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.

அதன்பேரில், பல்க லைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த டிசம்பர் 26 அன்று கருப்பூர் காவல் துறையினரால் கைது செய்  யப்பட்டு, பின்னர் நீதிமன்றத் தால் நிபந்தனை ஜாமீனில் விடு விக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது, தமிழ்நாடு அரசின் அறிவிப்பை  மீறி எம்.டெக். படிப்புகள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் விளம்பரம் வெளி யிட்டுள்ளது, மீண்டும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்த வரை, அண்ணா பல்கலைக் கழகத்தில் மட்டுமே தொழில் நுட்ப படிப்புகள் தொடங்க அனுமதி அளிக்க முடியும் என்றும் சேலம் பெரியார் பல்க லைக் கழகத்தில் தொழில்நுட்ப  படிப்புகள் தொடங்க அனுமதி  அளிக்க முடியாது என்றும் சட்ட மன்றத்தில் உயர்கல்வி துறை  அமைச்சர் க. பொன்முடி  ஏற்கெனவே தெரிவித்திருந் தார். மேலும் அவ்வாறு துவங்  கினால் அது உடனடியாக ரத்து  செய்யப்படும் என்றும் அறி வித்திருந்தார். ஆனால் தொடர்ந்து தமிழக  அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் வெள்ளிக்கிழமையன்று வெளி யிட்டுள்ள 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விளம்பரத்தில், மீண்டும் எம்.டெக். வகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

எம்.டெக் வகுப்பு எடுக்க, ஆசிரியர்கள் எம்.டெக். முடித்  திருக்க வேண்டும். ஆனால்  ஆசிரியர்கள் எம்.எஸ்.சி.  மட்டும் முடித்து உள்ளதால்  இவர்களால் எம்.டெக்.  வகுப்பு எடுக்க முடியாது.  அவ்வாறிருக்க மாணவர் களின் எதிர்காலத்தில் விளையாடும் பெரியார் பல்க லைக்கழகம் உடனடியாக எம்.டெக். வகுப்பு தொடர்பான அறிவிப்பைக் கைவிட வேண்  டும் என கோரிக்கை எழுந்துள்  ளது.  தமிழக அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் பல்கலைக்கழகம் மாண வர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதையும் நிறுத் திக் கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

;