tamilnadu

மெரினா கடற்கரையில் ராட்டினத்தில் சிக்கி சிறுவன் பலி

சென்னை, மே 21-சென்னை மெரீனா கடற்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்கிறார்கள். அங்குள்ள சிறிய வகை ராட்டினங்களில் சிறுவர்கள் ஏறி விளையாடுவார்கள்.இந்நிலையில், நொச்சி குப்பத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர் மெரினா கடற்கரையில் சுண்டல் விற்பனைசெய்யும் தொழில் செய்து வருகிறார். இவரதுஅ மகன் பிரணவ்(7).திங்களன்று மாலை சிறுவன் பிரணவ் தந்தை - தாயுடன் மெரினா கடற்கரைக்கு சென்றான். அப்போது அங்கு ராட்டினத்தில் சிறுவர்கள் அமர்ந்து சுற்றுவதை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ராட்டினத்தின் மிக அருகில் நிற்பதை பார்த்த தாய் சற்று விலகி நிற்குமாறு கூறினார்.இதை கவனித்த ராட்டினத்தின் உரிமையாளர் பிரகாஷ், சிறுவன் பிரணவ்வை அழைத்துச் சென்று ராட்டினத்தின் நடு பகுதியில் நிற்க வைத்தார். பின்னர் ராட்டினத்தை சுற்றியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பிரணவ் சட்டைராட்டினத்தின் கம்பியில் சிக்கியது. இதில் நிலை தடுமாறி தவறி விழுந்த பிரணவ் தலையில் கம்பி பலமாகமோதியது.பலத்த காயம் அடைந்த அவனை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.இதுகுறித்து அண்ணா சதுக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராட்டினத்தை இயக்கிய பிரகாசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

;