tamilnadu

img

தமிழில் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை வெளியிட வேண்டும்

சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாசென்னை தரமணியில் நடைபெற்றது. சதாசிவம், எஸ்.ஏ.பாப்டே, தஹில்ரமாணி ஆகிய 3 நீதிபதிகளுக்கு மாண்பமை சட்டவியல் முனைவர் பட்டத்தை குடியரசுத் தலைவர் வழங்கினார்.பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசுகையில், தீர்ப்புகளை அந்தந்தமாநில மொழிகளில் வெளியிட உயர்நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்கலாம் என்ற ஆலோசனையை கடந்த 2017ஆம் ஆண்டு தாம் முன்வைத்ததாகவும் இந்த ஆலோசனையை சத்தீஸ்கர் உள்ளிட்ட உயர்நீதிமன்றங்கள் செயல்படுத்துவது மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார். தீர்ப்புகளின் சான்றளிக்கப்பட்ட நகல்கள், கேரள உயர்நீதிமன்றத்தில் மலையாளத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்புகளை தமிழிலும் கிடைக்கச் செய்யலாம் என்றும் கூறினார்.ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி ஒரே மாதிரியாக சட்டத்தை அணுக முடியவில்லை என்றால்,அது குடியரசு முறையையே பரிகசிப்பதாக ஆகிவிடும். சட்டத்தொழில் துறை இந்த நிலைக்கு ஒட்டுமொத்தமாக தீர்வுகாண வேண்டும் என்றார்.

;