tamilnadu

தமிழகத்தில் பூஜ்யம்; வடக்கிலும் வெல்ல முடியாது

சென்னை, ஏப்.22- பாஜகவுக்கான அஸ்த மனம் தமிழகத்திலிருந்து துவங்கி விட்டதாக காங்கி ரஸ் மூத்த தலைவரும், புதுச்  சேரி முன்னாள் முதல்வரு மான நாராயணசாமி கூறி யுள்ளார்.

இதுதொடர்பாக பேட்டி  ஒன்றில் குறிப்பிட்டிருப்பதா வது:

400 இடங்களைப் பிடிப்  போம் என்று பாஜக கூறுகி றது. ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அந்த  கட்சியால் வெற்றியைப் பெற முடியாது. ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன் னால் அதை உண்மை என  மக்கள் நம்புவார்கள் என்ப தற்காக நாங்கள் 400 இடங் களை பிடிப்போம் என பாஜக  வினர் சொல்லிக் கொண்டி ருக்கிறார்கள். 

2019-ல் மோடி மிகவும் செல்வாக்குள்ள நபராக இருந்தபோதே பாஜக 303 தொகுதிகளைத் தாண்ட வில்லை. இன்றைக்கு மோடி யின் அந்தப் பிம்பம் சிதைந்து போய்விட்டது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கியாஸ்  சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள்  மிகவும் பாதிக்கப்பட்டு இருக்  கிறார்கள். இதனை சரிசெய்ய இந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நாட்டை 2047 நோக்கி கொண்டு செல்  வேன் என்கிறார் மோடி. அதை  எல்லாம் பார்க்க நாடும், நாட்டு மக்களும் இருக்க வேண்  டாமா? காங்கிரசின் 60 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 55 லட்சம் கோடிதான் கடன்  இருந்தது. இந்த பத்தாண்டு களில் 155 லட்சம் கோடி வெளிநாட்டில் கடனாக வாங்கி இருக்கிறார்கள். 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜகவுக்கு பூஜ்ஜியம் தான் கிடைக் கும். தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது, அனை வரும் டிடிவி பக்கம் வந்து விடுவார்கள் என்று அண்ணா மலை கூறி இருக்கிறார். கூட்  டணிக் கட்சிகளை உடைத்து  நாசமாக்குவது தான் பாஜக வின் வேலை. ஒவ்வொரு  மாநிலத்திலும் இதைச் செய்து வருகிறார்கள். தமிழ் நாட்டிலும் அதிமுகவை அப்  படி உடைத்து மூன்றாக நான்  காக பிரித்து வைத்திருக்கி றார்கள். 

ஆனால், தமிழ்நாட்டில் அவர்கள் நினைப்பது நடக்  காது. அதிமுகவை காப்  பாற்றும் விதமாகத்தான் எடப்  பாடி பழனிசாமி பாஜக கூட்ட ணியை முறித்துக்கொண்டு வெளியே வந்து தனியாக நிற்கிறார். இனி எந்தக் காலத்  திலும் அவர்கள் பாஜக வுடன் கூட்டணி வைக்க மாட்  டார்கள். அதனால் தப்பித்துக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பாஜக  நினைப்பது நடக்காது. அவர்  களின் அஸ்தமனம் தெற்கிலி ருந்து தமிழ்நாட்டிலிருந்து ஆரம்பமாகிவிட்டது. 

இவ்வாறு நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.

;