tamilnadu

மோடி அரசைக் கண்டித்து ஜூலை 8 கருப்பு தினம்.... பாதுகாப்புத்துறை ஊழியர் சம்மேளனங்கள் அறிவிப்பு....

சென்னை:
நாடு முழுவதும் வரும் 8ஆம் தேதி கருப்பு தினமாக கடைபிடிக்க பாதுகாப்பு துறை ஊழியர்களின் 5 சம்மேளனங்கள் கூட்டாக முடிவெடுத்துள்ளன.இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

4 லட்சம் பாதுகாப்புத் துறை ஊழியர்கள், 2 லட்சம் பாதுகாப்பு பொதுத்துறை ஊழியர்கள் ஆகியோரின் சட்டப்படியான வேலை நிறுத்த உரிமையை அவசர சட்டத்தின் மூலம் பறித்த மோடி அரசைக் கண்டித்து வரும் 8ஆம் தேதி நாடு தழுவிய கருப்பு தினம் கடைபிடிக்க 5 சம்மேளனங்கள் கூட் டாக முடிவெடுத்துள்ளன.மத்திய பாதுகாப்புத் துறையின்கீழ் கடந்த 220 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேற்றி அவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றியமைக்க ஒன்றிய மோடி அரசு எடுத்துள்ள தன் னிச்சையான, நாட்டின் பாதுகாப்பையே கேலிக்குரியாக்கும் மோசமான முடிவைக் கண்டித்து பாதுகாப்புத்துறை ஊழியர்கள் வரும் 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்க முடிவெடுத்துள்ளார்கள்.

இந்த வேலைநிறுத்தத் தின் தயாரிப்புகளைக் கண்டு அச்சமடைந்த ஒன்றிய அரசு தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூகமான தீர்வை எட்டுவதற்கு வழிகாணாமல், வேலை நிறுத்தத்தை நசுக்கவும் வேலை நிறுத்தத் தில் கலந்து கொள்ளுகின்ற தொழிலாளர்களை பழிவாங்கும் வண்ணமாக பாதுகாப்புத்துறை சேவை அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.இச்சட்டத்தின்படி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தாலோ அதில் பங்கு கொண்டாலோ, போராட்ட நிதி வழங்கி
னாலோ இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கவும் வழிவகுக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வெளியிடப்பட்டுள்ள மிக மோசமான காட்டுமிராண்டித்தனமான இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடுவது என பாதுகாப்புத்துறை ஊழியர்களின் 5 சம்மேளனங்களின் கூட்டுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதையொட்டி வரும் 8ஆம் தேதி நாடு தழுவிய கருப்பு தினம் கடைபிடிப்பது என முடிவெடுக்கப்பட்டது. மேலும் ஒன்றிய மோடி அரசினுடைய தொழிலாளர் விரோத போக்கினையும், ஜனநாயக உரிமைகளை பறிக்கின்ற போக்கினையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள் ளது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;