tamilnadu

img

ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 2 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்.... முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்.....

சென்னை:
ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 2 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஞாயிறன்று (செப்.12) கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இதில், சுமார் 40,000 மையங்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:‘‘தடுப்பூசி செலுத்திய பிறகு ஏதேனும் விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா விழிப்புணர்வு பதாகைகள், போஸ்டர்கள், மைக் மூலம் அறிவித்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக 40,000 வரை மையங்களை ஆரம்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு மையத்தில் அதிகபட்சமாக 100-200 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இந்த மாதம் ஒரு கோடி தடுப்பூசி கொடுப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 2 கோடி தடுப்பூசி செலுத்தினால்தான் மீதமுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும். முதல் மாதத்தில் 3 லட்சம் பேருக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், கடந்த மாதம் 92 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களிலேயே 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;