tamilnadu

img

100 நாள் வேலையை தொடங்க தமிழக அரசு உத்தரவு

சிவகங்கை:
தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான நூறுநாள் வேலைத் திட்டத்தை உடனே தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வேலை செய்ய வருபவர்கள் ஊரடங்கு சட்டத்தை மீறாமல் செயல்பட வேண்டும் . அதாவது சமூகவிலகல் இருக்க வேண்டும்.முக கவசம் அணிய வேண்டும்.கைகழுவ வேண்டும்.இவைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.வாய்க்கால்களை மேம்படுத்துவது,குட்டைகளை ஆழப்படுத்துவது உள்ளிட்ட  பணிகளில் ஈடுபட வேண்டும் என உத்தரவில் உள்ளது.  

இது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயலாளர் செல்வக்குமார் கூறும்போது,வேலைசெய்ய வருகிறவர்களுக்கு ஒரு வாரத்திற்குண்டான முன் சம்பளம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக முககவசம், கைகழுவ தேவையான  சோப்  ஆகியவை தேவையான அளவு வைத்திருக்க வேண்டும்  என்று டிஆர்டிஏ இயக்குநரிடம் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
 

;