tamilnadu

img

மத்திய-மாநில அரசுகள் சிறு, குறு தொழில்களை கைவிட்டுவிட்டன....தொழில் முடக்கத்தால் தற்கொலை செய்த தொழில் முனைவோர் குடும்பத்தினருக்கு ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல்....

கோயம்புத்தூர்:
கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்ட தொழில் முடக்கத்தால் கோவையில் தொழில் முனைவோர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவரதுகுடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஞாயிறன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் இயேசு ராஜ். இவர்இருகூர் பகுதியில் தனியாக இன்ஜினியரிங் தொழிற்கூடம் நடத்தி வந்தார். உலகையே அச்சுறுத்திய கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மத்திய பாஜகஅரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அமல்படுத்தியது. எந்தவித முன்னேற்பாடும் செய்யாமல் பாஜகஅரசு மேற்கொண்ட ஊரடங்கு நடவடிக்கையால் ஏழை-எளிய மக்களும்தொழிலாளர்கள்-தொழில்முனை வோர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை பாஜக அரசு போதுமான அளவில் செய்யவில்லை. 

இந்நிலையில் கொரோனா பொது முடக்கத்தால் போதுமான ஜாப் ஆர்டர் கிடைக்காததால், கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால்ஏசுராஜ் கடந்த ஜனவரி 28 ஆம் தேதியன்று தனது நிறுவனத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சொந்த தொழில் செய்து முன்னேற வேண்டும் என தொழில் துவங்கியவர், கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்ட தொழில் முடக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொழில் முனைவோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கோவை வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மறைந்த இயேசு ராஜின் மனைவி சுகுணா தேவி, அவரது குழந்தைகளுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

இதையடுத்து ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், கொரோனா பேரிடர் காலத்தையொட்டிய முன்னறிவிப்பற்ற பொது முடக்கத்தால் சொந்த ஊரில்உள்ள தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. சிறு, குறு தொழில் முனைவோர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு இயேசுராஜ் தற்கொலையே சாட்சியாக உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள், கடன் தள்ளுபடி போன்ற சலுகைகளை வழங்கும்மத்திய, மாநில அரசுகள் சிறு, குறு தொழில்களை மட்டும் தன்னந்தனியாக விட்டுவிட்டது. இதன் காரணமாகவே இதுபோன்ற துயரங்கள் ஏற்பட்டுள்ளன. இயேசு ராஜ் போன்ற தொழில் முனைவோர் தற்கொலைக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். தேர்தல் காலத்தை யொட்டி தொழில் முனைவோரை சந்தித்து அக்கறையுள்ளவர்கள் போல் நடிப்பதற்கு மாறாக, இப்போதாவது மத்திய, மாநில அரசுகள் சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதற்கும், வங்கி கடன் தள்ளுபடி, வங்கி தவணை காலம் நீட்டிப்பு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். இதுவே லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் சிறு, குறு தொழிலை பாதுகாப்பதற்கான நடவடிக்கை யாக இருக்கும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பீளமேடு நகரச் செயலாளர் கே.பாண்டியன், கட்சி நிர்வாகிகள் ஜோதிபாசு, பூபதி உள்ளிட்ட பலர் இயேசு ராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
 

;