tamilnadu

img

வனத்துறையின் மெத்தனத்தால் சர்கார்பதி மலைவாழ் மக்கள் அவதி

மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்

பொள்ளாச்சி, செப்.13- பொள்ளாச்சி அடுத்த சர்கார்பதி வன கிராமத்தில்  பழங்குடியின மக்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு ஒரு மாத காலம் கடந்தும், வனத்துறை தரப்பிலிருந்து எவ்வித நடவ டிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதால் மலைவாழ் மக் கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். கோவை மாவட்டம், பொள் ளாச்சியை அடுத்த சர்கார்பதி வன கிராமத்தில் 30க்கும்  மேற்பட்ட பழங்குடியின மலைவாழ் மக்கள் குடும்பங்களைச் சேர்ந்தோர்  வசித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட்  8 ஆம் தேதியன்று பெய்த கனமழையின்போது சர்கார்பதி வன கிராமத்திலுள்ள 17 வீடுகள் முற்றிலுமாக மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இந்த வெள்ள பாதிப்புகள் குறித்து  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கள ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதன்பின்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு சர்கார்பதி அருகிலுள்ள 300 மீட்டர் தொலை வில் குடியிருப்புகள் கட்டி நட வடிக்கை எடுக்க வேண்டுமென வருவாய்த் துறையினருக்கும்,  வனத் துறையினருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக தற்போது வரை வனத்துறை யிடமிருந்து எவ்வித பதிலும் வர வில்லை. வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்ட போதி லும் வனத்துறையினர் முன்வர வில்லை என தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ்.பரம சிவம் தெரிவித்தார். மேலும், இது குறித்து அவர் கூறுகையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மலைவாழ் மக்களின் குடும் பங்களுக்கு பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் தலை மையில் தேவையான நிவாரண உதவிகளும்,  தற்காலிக முகாம் களும் அமைக்கப்பட்டு  ஒத்து ழைப்பு அளிக்கப்பட்டது. இதனை யடுத்து மாவட்ட ஆட்சியர் மற் றும் பொள்ளாச்சி வருவாய் கோட் டாட்சியர்,  ஆனைமலை வட்டாட் சியர் ஆகியோரிடம் வைக்கப்பட்ட கோரிக்கை அடிப்படையில் வீடு களை இழந்த மலைவாழ் மக்க ளுக்கு மாற்று இடம் வழங்க முன் வந்தனர்.

இதன்பின்னர் சர்கார்பதி அருகே உள்ள 300 மீட்டர் தொலை வில் சமவெளி பகுதியில் உள்ள காலி இடங்களில் வீடுகள் கட்டித் தர வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார் பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், வனத்துறை அதற்கான நடவடிக்கைகளில் துளியும் ஈடு படாமல் மெத்தனம் காட்டி வரு கிறது. குறிப்பாக மாவட்ட வன அலுவலர் எதையும் கண்டுகொள் ளாததுடன், மலைவாழ்  மக்களை வனத்தை விட்டு வெளியேற்ற வெள்ள பாதிப்புகளை பயன்படுத் தலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்.  இவ்வாறு வனத்துறை தொடர்ந்து மலை வாழ் மக்களை புறக்கணித்து வரு கிறது. எனவே, வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடியாக மாற்று  இடம் வனத்துறை காண்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சங்கத்தின் சார்பில் தொடர் போராட் டங்கள் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். (ந.நி)

;