tamilnadu

img

இலவச மின்சாரம் தொடர உறுதியான நடவடிக்கை எடுத்திடுக

தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

திருப்பூர், மே 29 - இலவச மின்சாரம் தொடர உறுதியான நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று தமிழக முதல் வருக்கு விவசாயிகள் கூட்டியக்கத் தின் சார்பில் மாவட்ட ஆட்சியரி டம் மனு அளிக்கப்பட்டது. தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்கம், தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், உழவர் உழைப்பாளர் கட்சி, செங்காந்தள் மலர் விதை விவசாயிகள் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகி கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரை வியாழனன்று சந்தித்து மனு  அளித்தனர். தமிழக  முதல்வருக்கு கோரிக்கை விடுத்து அளிக்கப் பட்ட இம்மனுவில் கூறியிருப்ப தாவது:  மத்திய அரசு மின்சார சட்டத்  திருத்த மசோதா 2020ஐ கொண்டு வந்து, அந்த திருத்தங் களின் மீதான கருத்தை  மாநிலங்கள் பதிவு செய்வதற்காக ஜூன் 2 வரை காலக்கெடு நிர்ண யித்து உள்ளது. அவற்றில் மிக மிக முக்கியமானது, இந்திய மின்சார சட்டம் பிரிவு 63 மற்றும் 65 ல் முன் மொழிந்துள்ள திருத்தங்கள் ஆகும். இத்திருத்தங்கள் நடை முறைக்கு வந்தால் விவசாயிகள், ஏழைகள், கைத்தறி மற்றும் விசைத் தறியாளர்கள், வீட்டு மின்சார நுகர் வோருக்கும் இதுவரை தமிழக அரசு கொடுத்து வரும் மானி யத்தைத் தொடர்வதில் மாபெரும் சிக்கல் ஏற்படும். அதுமட்டுமன்றி மேற்கண்ட திருத்தங்களால் தனியார் மின் விநியோக நிறுவனங்கள், மின்சார உபயோக கண்டனத்தை விவ சாயிகளிடமிருந்து நேரடியாக வசூலித்து கொள்ளவும் அதிகா ரத்தை வழங்கியுள்ளது. இதனால் ஒவ்வொரு முறை மின் கட்டணம் கட்டும்போதும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம்  வரை திரட்டும் நிலைக்கு உழவர் வர்கள் தள்ளப்படுவார்கள். விவ சாயிகளால் அந்த நிதிச்சுமையைத் தாங்குவது கடினம்.

ஏற்கெனவே விவசாய விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காததால்  தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள், வங்கிகளில் பெற்ற கடன்களை கூட கட்ட முடியாத நிலை உள்ளது. இந்த திருத்தச் சட்டம் கொண்டு வந்தால் உரிய நேரத்தில் மின் கட்டணம் கட்ட இயலாது. அதன் காரணமாக அடிக்கடி மின் துண்டிப்பு ஏற் பட்டு சரியான நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச இயலாமல் போகும். விளைச்சல் கடுமையாக பாதிக்கப் பட்டு விவசாயத்தை விட்டு விவ சாயிகள் வெளியேறும் நிலை ஏற்படும். விவசாயிகளின் தற் கொலைகளும் பெருகும். இந்த திருத்தச் சட்டத்தில் பிரிவு  2ல் உட்பிரிவு (15 ஏ) மற்றும் பிரிவு 49ஏ ஆகிய இரண்டு பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளன. சிறு, குறு விவசாய நிலங்களின் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைத்து இந்தியாவில் மின்சா ரத்தை உற்பத்தி செய்து வெளி நாடுகளுக்கு மின்சாரத்தை கொண்டு சென்று விற்பதற்கான அதிகாரத்தை இந்த சட்டத் திருத் தம் வழங்க உள்ளது. ஏற்கெனவே உள்நாட்டு பயன்பாட்டுக்காக உயர்மின் கோபுரங்கள் அமைக் கப்பட்டதால் பல லட்சம் தமிழக விவசாயிகள் தங்களது நிலத் தின் மதிப்பை இழந்து, அவர்களது வாழ்வாதாரமும் இழந்து கேள்விக் குறியாகி உள்ளது. இதுபோதா தென்று வெளிநாட்டுக்கு மின்சா ரத்தை விற்பதற்கும், இரு நாடு களுக்கிடையே மின்சாரத்தை கொண்டு செல்வதற்காக தமிழக மண்ணை அனுமதிப்பதற்கும் இந்த சட்டத்திருத்தம் கொண்டு  வரப்பட்டுள்ளது. இது தமிழக விவசாயிகளின் வாழ்வா தாரத்தை அடியோடு நசுக்கு வதற்கு சமமாகும்.

இச்சூழலில் மின்சார சட்டத்  திருத்த மசோதா 2020 கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி யிருப்பதும், தமிழக மின்துறை அமைச்சர் இலவச மின்சாரம் தொடரும் என்ற அறிவிப்பும் விவசாயிகளுக்கு ஓரளவு ஆதர வளித்துள்ளது. மின்சாரம் என்பது நமது இந்திய அரசியலமைப்பு சட்டத் தின் 3 ஆம் பட்டியல் அதாவது  பொதுப் பட்டியலில் உள்ளமை யால் மத்திய அரசு தமிழக அரசின் எதிர்ப்பிற்கிடையே மின்சார சட்ட திருத்த மசோதா 2020-ஐ இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற் றும் பட்சத்தில், தமிழக அரசு சட்ட சபையில் சட்டமியற்றி குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று தமிழகத்தில் இலவச மின்சார திட்டத்தினை எவ்வித பாதிப்பும் இன்றி தொடர இயலும். இத்துடன் தட்கல் முறையில் மின் இணைப்பினை பெறுவதற்கு தற்போது ஒரு குதிரை திறனுக்கு ரூ.20 ஆயிரம் என்ற வீதத்தில் பெறப்படும் வைப்புத்தொகையை முற்றிலுமாக ரத்து செய்தும், கட்ட ணமில்லாமல் வரன்முறைப் படுத்தியும்,வேளாண் மின்சார இணைப்பு வேண்டி ஏற்கெனவே பல ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக வேளாண் மின் இணைப்பு வழங் கியும் நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் மு.ஈசன், உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட இளைஞரணி தலைவர் பி.சோம சுந்தரம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் பி.சண்முகசுந்தரம், நேர்மை  மக்கள் இயக்க ஒருங்கிணைப் பாளர் பழ.ரகுபதி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் ஜி.கே.கேசவன், உழவர் உழைப்பாளர் கட்சி மாநகர செய லாளர் ஜீவா கிட்டு,  குழந்தை பாளையம் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;