tamilnadu

img

10 ஆம் வகுப்பு பொது தேர்வு அறிவிப்பை திரும்ப பெறுக இந்திய மாணவர் சங்கம் மனு கொடுக்கும் இயக்கம்

கோவை, மே 18-  மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் இந்த ஊரடங்கு மே31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் எப்போது திறக்கப்படும் என்கிற தீர்மானகரமான முடிவை அரசு இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில்,  கொரோனா வைரசின் தாக்கம் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் இந்தியாவில் தீவிர மாகும் என மருத்துவ நிபுணர்கள் எச் சரிக்கை விடுத்துள்ளனர்.  இதற்கிடையில், தமிழக கல்வித் துறை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என  தேர்வு அட்டவணையை வெளியிட் டுள்ளது.

இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மன உளைச் சலையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, இந்த அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித்துறை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத் தின் மாநிலக்குழு, மாநிலம் முழுவதும் மனுகொடுக்கும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது.  இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டக்குழு சார்பில் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளிக்கப்பட்டது. அம் மனுவில், உடனடியாக பள்ளிக்கல்வித் துறை பொது தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். கல்வி நிலை யங்கள் திறக்கப்பட்டு, வகுப்புகள் எடுக்கப்பட்டு தேர்வுக்கு மாணவர் களின் மனநிலை தயாரான பின்னரே பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழக அரசு தேர்வு என்பது கடமை என்று பாராமல் இது மாணவர்களின் எதிர்காலம் சார்ந்தது என்பதை உணர்ந்து கல்வித்துறை பொதுத்தேர் விற்கான அறிவிப்பை திரும்பபெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள் ளது.  இதில் சங்கத்தின் மாவட்ட தலை வர் அசார், மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் அகிலன், ஜீவி ஆகி யோர் கலந்து கொண்டனர்.

சேலம்
சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மனு அளிக்கும் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாவட்ட செயலாளர் கவின் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட் சியரிடம் மனு அளித்தனர். இந்நிகழ் விற்கு பள்ளி மாணவர் உபகுழு கன்வீனர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் மாணவர் சங்க  மாவட்ட தலைவர் பிரவீன், மாவட்ட  செயலாளர் சம்சீர், துணை நிர்வாகிகள் சஞ்சய், மோகனா, கல்கி உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.
தருமபுரி
இதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யக்கோரி தருமபுரி மாவட்ட குழு சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட துணைத்தலைவர் தமிழ் அமுதன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;