tamilnadu

அன்றும் இன்றும் பி.ஆர்.நடராஜன்

அன்று…

நாடாளுமன்றத்தில் பி.ஆர்.நடராஜன் எழுப்பிய கேள்வி: மாற்றுத்திறனாளிகள் சட்டத்தை மீறுவோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் பி.பலராம் நாயக் அளித்த பதில்: மாற்றுத்திறனாளிகள் சமவாய்ப்பு சட்டத்தை (1995)மீறுவோரை தண்டிப்பதற்கு இந்த சட்டத்தில் ஷரத்துக்கள் ஏதுவும் இல்லை. ஆனாலும், இச்சட்டம் அமலுக்கு வந்தபிறகு இதுவரை (2013 ஆகஸ்ட்) 25,571 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று…


இன்று…

மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 (சுiபாவள வடி ஞநசளடிளே றiவா னுளையbடைவைநைள யஉவ 2016) இந்திய நாடாளுமன்றத்தால் டிசம்பர் 2016இல் இயற்றபட்டது. முன்னதாக 2014இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இம்மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்திருந்தது. குறைபாடுகளை நீக்கும் பொருட்டு சட்டம் நிறைவேற்ற முடியாத நிலைஏற்பட்டது. பல்வேறு மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் இரண்டரை ஆண்டுகள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் பாஜக அரசுக்கு ஏற்பட்டது. ஆனாலும் இச்சட்டத்தை மீறுவோருக்கு தண்டனை என்பதை வெறும் அபராதமாக மட்டுமே மோடி அரசு குறிப்பிட்டுள்ளது.

;