tamilnadu

img

கடத்தல் தங்கத்தின் நிறம் காவியும் பச்சையும் என்பது கைது செய்யப்பட்டவர்களை பார்த்தால் தெரிந்துவிடும்....

திருவனந்தபுரம்:
கேரளத்துக்கு கடத்தும் தங்கத்தின் நிறம் சிவப்பல்ல என்பது இப்போது தெளிவாகிவிட்டது. அதன் நிறம் காவியும் பச்சையும் என்பது கைது செய்யப்பட்டிருப்பவர்களைப் பார்த்தால் தெரிந்துவிடும் என்று கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் வெள்ளியன்று நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தின் முடிவுகளை விளக்கி மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: தீவிரவாத அமைப்புகளுடன் கூட்டாளியாகும் முஸ்லீம்லீகும் காங்கிரசும் விசாரணையை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. சான்றுகள் இருந்தால் அவற்றை விசாரணை நடத்துவோரிடம் கொடுத்தால் போதாதா என்று கொடியேரி கேள்வி எழுப்பினார்.

முதல்வரின் கையும்  அலுவலகமும் சுத்தம்
எம்.சிவசங்கரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வந்தபோதே முதல்வர்அலுவலகத்திலிருந்து அவர் மாற்றப்பட்டார். அந்த நாள் முதல் சிவசங்கரனுக்கு முதல்வர் அலுவலகத்தின் எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை. முதல்வரிடமிருந்து ஒருதவறும் ஏற்படவில்லை. சிவசங்கரனுக்கு எதிராக சுங்கத்துறையோ என்ஐஏவோ அறிக்கை அளிக்கவில்லை. சொப்னாவுக்குமுறைகேடாக நியமனம் அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டு தலைமை செயலாளர் தலைமையில் விசாரிக்கப்பட்டது. இத்த
கைய ஒரு சூழ்நிலையில் எந்த அரசும் மேற்கொள்ள வேண்டிய உன்னதமான உதாரணமாகும் இது.சோலார் வழக்கு போன்றது தங்க கடத்தல் வழக்கு என சில ஊடகங்கள் உட்பட பிரச்சாரம் நடத்துகின்றன. அதற்கு எந்த ஒருஅடிப்படையும் இல்லை. யுடிஎப் ஆட்சி காலத்தில் இருந்த முதல்வர் அலுவலகம்போல் ஆகிவிட்டது என்று சித்தரிக்கும் முயற்சி இது. சோலார் வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளானது அன்றைய முதல்வர்தான். இரையாக்கப்பட்ட பெண் அன்று உம்மன்சாண்டிக்கும் அமைச்சர்களுக்கும் எதிராகதெளிவான குற்றச்சாட்டுகளை கூறினாரே.உம்மன்சாண்டி கூறியதால் பணம் கொடுத்ததாக தொழில் அதிபர் ஸ்ரீதரன் நாயர் கூறினார். அத்தகைய சம்பவம் ஏதேனும் இப்போது உள்ளதா? முதல்வரின் கைகளும் அலுவலகமும் சுத்தமாக உள்ளன.

கோவிட் நிபந்தனைகளை புறக்கணித்து காங்கிரசும் லீகும் ஒருபுறமும் மற்றொருபுறத்தில் பாஜகவும் போராட்டங்களை நடத்தின. கோவிட் விதிமுறைகள் கொண்டு வந்தது மோடி அரசுதான். அதற்குசவால் விடுத்து பாஜக போராடியது. ராஜீயபார்சலில் வந்த தங்கம் பிடித்தது சுங்கத்துறையின் துணிச்சலான நடவடிக்கையாகும். இதை என்ஐஏ விசாரிக்க விரிவான அதிகாரம் உள்ளது.

கோவிட்டில் ஒத்துழைக்காத எதிர்க்கட்சி
 கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் எதிர்க்கட்சியிடம் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் ஒத்துழைக்கவில்லை. இங்கெல்லாம் அதிகாரிகள் நேரடியாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சமூகப் பரவலை எட்டும் வாய்ப்பு மாநிலத்தில் உள்ளது. சிபிஎம் ஊழியர்கள் கோவிட் பாதுகாப்பில் தீவிரமாக ஈடுபட வேண்டும். விழிப்புணர்வு மற்றும் வெகுஜன திட்டமிடல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் தேவை. ஒவ்வொருவீட்டையும் ஆய்வு செய்து என்ன உதவிதேவை என்பதை அறிந்து தலையிட வேண்டும்என்று கொடியேரி கேட்டுக்கொண்டார்.

நகை கடை திறந்து வைத்த லீக் தலைவர் குற்றவாளியா?
எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டு வருவதன் மூலம் அரசுக்கானஆதரவை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்திக்கொள்ள முடியும். நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படுவற்கு ஒரு எதிர்ப்பும் இல்லை. அதைசட்டமன்றம் நிராகரிக்கும். சபாநாயகர் மீதான விவாதங்கள் தேவையற்றது. நகைகடை திறக்கச் சென்றவர்களுக்கு தங்க கடத்தலுடன் தொடர்பு இருக்குமோ. என்ஐஏகைது செய்த ஒருவரது நடை கடையை திறந்துவைத்தது முஸ்லீம் லீகு தலைவராகும். அதனால் அவருக்கு தங்க கடத்தலில் பங்குஉள்ளதா என்றும் கொடியேரி கேள்வி எழுப்பினார்.

;