tamilnadu

img

பீர் பாட்டில்; துப்பாக்கியுடன் டிஸ்கோ ஆடிய பாஜக எம்எல்ஏ

உத்தர்கண்ட்:
பாஜக எம்எல்ஏ ஒருவர், பீர் மதுபானத்தைக் குடித்துக் கொண்டு, கையில் துப்பாக்கியுடன் நடனமாடும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர், பிரணவ் சிங் சாம்பியன். பாஜக எம்எல்ஏ-வான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பத்திரிகையாளர் ஒருவரை மிரட்டியதாக சர்ச்சையில் சிக்கினார். 

இதனால், பாஜக தலைமை அவரை கட்சியிலிருந்து இடை நீக்கமும் செய்தது. இதனிடையே காலில் அறு வை சிகிச்சை செய்துவிட்டு வீட்டில் ஓய்வில் இருப்பதாக கூறப்பட்ட பிரணவ், உயர் ரக துப்பாக்கிகளை கையில் வைத்துக்கொண்டு கையில் கண்ணாடி கிளாசில் மது அருந்தியபடி நடனமாடியது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், பலரும் பாஜக எம்எல்ஏ-வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு எம்எல்ஏ-விடம் எப்படி இத்தனை துப்பாக்கிகள் இருக்கின்றன? என்றும் பலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.பிரணவ் சிங்கின் ஆட்டம், காவல்துறையின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

;