tamilnadu

img

கொரோனா தீவிரமாக பரவி வருகிறது புதிய, அபாய கட்டத்தில் உள்ளோம்

ஜெனிவா:
 உலக நாடுகளில் கொரோனா மிக அதி தீவிரமாக பரவுகிறது. நாம் புதிய மற்றும் அபாயகரமான  கட்டத்தில் உள்ளோம்என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரோனா பாதிப்பு தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோமஸ் கூறியுள்ளதாவது: 

அமெரிக்கா, தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்தான் அதிக பாதிப்பு இருந்து வருகிறது. நாம் தற்போதுபுதிய, அபாயகரமான கட்டத்தில் இருக்கிறோம். கொரோனாஇப்போது அதிவேகமாகவேப் பரவிக் கொண்டிருக்கிறது. ஆகையால் முகக் கவசம் அணிவது, சமூக விலகலைக் கடைப்பிடிப்பது, கை கழுவுதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவேண்டும்.கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக உலக  நாடுகள் அனைத்தும் மிக மிக கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதுகடினமாக உள்ளது என்று டெட்ரோஸ் அதானோமஸ் கூறினார்.கொரோனா தடுப்பிற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நேரத்தில், அது எந்த அளவிற்கு பரவியிருக்கலாம் என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஐரோப்பாவில் கொரோனாவால் 4,54,000- க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். உலகளவில் 8.4 மில்லியன் மக்களை பாதித்துள்ளது. ஐரோப்பா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தளர்த்தியபோது அமெரிக்காவிலும் ஆசியாவின் சில பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.கொரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்குபொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொற்றுநோய் இன்னும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக உலகசுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.உலக அளவில், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,37,901 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் அதிகமாக 22,19,119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக இறப்பு எண்ணிக்கை 4.59 லட்சத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.

இந்தியா 4 லட்சத்தை நெருங்குகிறது
புதுதில்லியில், மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளதகவலில் கடந்த  24 மணி நேரத்தில்  புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் 14,516 ஆக உள்ளது.இதை தொடர்ந்துஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,95,048ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 375 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள்மொத்த  எண்ணிக்கை 12,948ஆக உயர்ந்து உள்ளது.கொரோனாபாதிப்பில் இருந்து இதுவரை 2,13,831 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தொற்று பாதித்த மிக மோசமான மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. 23,512 பேர்சிகிச்சையில் உள்ளர். 30 ஆயிரத்து 271 பேர் குணமடைந்துள்ளனர். 54,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) கொரோனா சோதனை திறனை அதிகரிக்குமாறு மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்க்காக மொத்தம் 66,16,496 மாதிரிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பரிசோதித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 1,89,869 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.

மாநிலம் வாரியாக தொற்று பாதித்தவர்கள் நிலவரம்
மராட்டியம் - 1,24,331, தமிழ்நாடு - 54,449, தில்லி - 53,116,குஜராத் - 26,141, இராஜஸ்தான் - 14,156, உத்தரப் பிரதேசம் - 15,785, மத்தியப் பிரதேசம் - 11,582, மேற்குவங்காளம் - 13,090, தெலுங்கானா - 6,526, கர்நாடகா - 8,281.

;