tamilnadu

img

பிரான்சிலும் கொரோனா 2-வது அலை...  ஒரே நாளில் 4ஆயிரம் பேருக்கு தொற்று ...  

பாரீஸ் 
ஐரோப்பா நாடுகளில் ஒன்றான பிரான்சில் மார்ச் முதல் வாரத்தில் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா மே 2-ஆம் தேதி வரை வலுவான வேகத்தில் பரவி 2 லட்சம் பேரை மருத்துவமனைக்கு அனுப்பியது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய நிலையில், மே மாத கடைசியில் கொரோனா பரவல் சற்று மந்தமாகியது. பச்சை மண்டலம் பெறவில்லையென்றாலும் தினசரி பாதிப்பு 500-க்குள் இருந்தது. இதனால் அந்நாட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். 

இந்நிலையில் ஆகஸ்ட் மாத தொடக்கத்திலிருந்து ஸ்பெயினை போலவே பிரான்சிலும் கொரோனா 2-வது அலை தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்கு மேல் இருந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிய உச்சமாக 4,771 ஆக உயர்ந்துள்ளது. இந்த விஷயம் பிரான்ஸ் நாட்டில் மட்டுமின்றி ஐரோப்பா கண்ட மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பிரான்ஸ்.... 

மொத்த  கொரோனா பாதிப்பு   - 2.29 லட்சம் 

பலி எண்ணிக்கை  - 30,480 

குணம்  - 84 ஆயிரத்துக்கு மேல் 

சிகிச்சையில்  - 1.15 லட்சம் 

அதிர்ச்சி தகவல்  -  குறைந்த பாதிப்பில் அதிக உயிரிழப்பைச் சந்தித்த நாடு. 
 

;