states

img

உதவி கேட்டு வந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த தேவகவுடா பேரன்

கர்நாடகத்தில் கதிகலங்கும் பாஜக கூட்டணி

பெங்களூரு, ஏப்.28- மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (ஜேடிஎஸ்) தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேர னும், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா 18ஆவது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் ஹாசன் தொகுதி வேட்பாளராக உள்ளார்.  மக்களவைத் தேர்தலில் பாஜக வுடன் ஜேடிஎஸ் கைகோர்த்துள்ள நிலையில், ஹாசன் தொகுதிக்கு ஏப்ரல் 26 அன்று நடைபெற்ற இரண் டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நடை பெற்ற ஒரு நாளுக்கு முன், அதா வது ஏப்ரல் 25 அன்று ஹாசன் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்  வல் ரேவண்ணா தன்னிடம் உதவி  கேட்டும், வேலைக்கான ஆணை வழங்க உதவுமாறு வந்த பெண்களை  மயக்கியும், அதிகாரத்தை வைத்து  மிரட்டியும் பாலியல் வன்முறைக் குள்ளாக்கியதாக கர்நாடக மாநி லத்தில் உள்ள வாட்ஸ் அப் குரூப் களில் செய்தி ஒன்று வைரலானது. அடுத்த சில மணிநேரங்களில்  பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் வீடி யோக்களின் தொகுப்பு என 300க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் வாட்ஸ் அப் குரூப்களில் வெளியா னது. வாக்குப்பதிவு நடைபெறும் 24  மணிநேரத்திற்குள் இந்த வீடியோக் கள் வெளியானதால் ஜேடிஎஸ் -  பாஜக கூட்டணி அதிர்ச்சியில் உறைந்  தது. 

ரேவண்ணா தலைமறைவு

கர்நாடகாவில் தேர்தல் நடை பெறுவதற்கு 17 மணிநேரத்திற்கு முன்பு ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகியது என்  றாலும், அடுத்த நாள் தேர்தல் என்ப தால் இந்த விவகாரம் ஹாசன் தொகுதி மற்றும் கர்நாடகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பேசும் பொரு ளானது. வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின் மாநிலம் முழுவதும்  ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்  கள் பரவிய நிலையில், ஏப்ரல் 27  முதல் நாடு முழுவதும் ரேவண்ணா வின் பாலியல் வன்குற்றங்கள் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் ரேவண்ணா தலைமறை வாகிவிட்டதாக பெங்களூரு காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது.

கடும் நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

ரேவண்ணா பாலியல் விவகாரம்  கர்நாடக மகளிர் ஆணையம், மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு எழு திய கடிதத்தில்,”பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச  வீடியோ கிளிப்களில், பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டிருப்பதாக தெரிகிறது. அத னால் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை  செய்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது கர்நாடக அரசு

இந்நிலையில் “ஜேடிஎஸ் தலை வர் ரேவண்ணா பாலியல் விவகா ரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு  புலனாய்வுக் குழு அமைக்கப்பட் டது. மாநில மகளிர் ஆணையம் பரிந்து ரையின் அடிப்படையில் இந்த நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது” என கர்நாடக முதல்வர் சித்த ராமையா தனது டுவிட்டர் எக்ஸ் பக்  கத்தில் கூறியுள்ளார்.

பரிதவிக்கும் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி

கர்நாடகா மாநிலத்திற்கு எது வும் செய்யாத பாஜகவை “பாரதிய சொம்பு கட்சி” என்று  குறிப்பிட்டு ராகுல் காந்தி ஏற்கெ னவே பிரச்சாரம் மேற்கொண் டார். கர்நாடக மாநிலத்தில் பாஜகவிற்கு எதிரான “ஒற்றை  சொம்பு” பிரச்சாரம் அனல் பறந்து வரும் நிலையில், தற் போது ஜேடிஎஸ் தலைவர் ரேவண்ணாவின் பாலியல் வீடியோ பாஜகவிற்கு பெரும்  தலைவலியை ஏற்படுத்தியுள் ளது. இதனால் என்ன செய்வது  என்று தெரியாமல் பாஜக -  ஜேடிஎஸ் கட்சியினர் பரி தவித்து வருகின்றனர்.

பிரச்சாரம் மேற்கொள்ள ஜேடிஎஸ் தொண்டர்கள் மறுப்பு

கர்நாடக மாநிலத்தில் மொத்  தமுள்ள 28 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 அன்று முதல்கட்டத் தேர்தலில் 14 தொகுதிகளுக்கு  வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மே 7 அன்று நடை பெறும் இரண்டாம் கட்டத் தேர்த லில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், ரேவண்ணா வின் வீடியோ வெளியானதால் அதிர்ச்சி அடைந்த ஜேடிஎஸ் தொண்டர்கள் இரண்டாம் கட்  டத் தேர்தலில் வாக்குக் கேட்க வும், வாக்குச்சாவடி தொடர்  பான வேலைக்கும் வராமல்  வீட்டிலேயே முடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

;