states

img

நாம் வெல்வோம்! பெருமை வாய்ந்த இந்திய திருநாட்டை பாதுகாப்போம்!! - வே.தூயவன்

வெள்ளையர்களிடம் அடிமைப் பட்டுக் கிடந்த இந்தியாவை மீட்பதற்கு 200 ஆண்டுகளுக்கு மேலான தியாகம் செய்த, உயிர், உடமை, சொத்து, குடும்ப உறவுகளை இழந்த போராட்டம் நடைபெற்றது. இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர், ஜெயின் உள்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும், மத நம்பிக்கை இல்லாதவர்களும், பிரா மணர்கள் முதல் பட்டியல் இனத்தினர், பழங்குடிகள் வரை பல்வேறு சாதிகளை சேர்ந்தவர்களும் தமிழர், மலையாளி, கன்னடர், தெலுங்கு, மராத்தியர், வங்காளி, பீகாரி, ராஜஸ்தானி என்று பல்வேறு மாநி லங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்று சேர்ந்து போராடித்தான் விடுதலைகிடைத்தது. இந்த விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசுக்கு பங்கு உண்டு. முஸ்லிம் லீக்குக்கு பங்கு உண்டு. கம்யூனிஸ்ட்டு களுக்கு பங்கு உண்டு. இன்னும் எண்ணற்ற பிரிவினர் அவரவர் வழியில்  வெள்ளையர்களை எதிர்த்து போராடி யுள்ளனர். அமைதி வழியில் போராடி யவர்களும் உண்டு, ஆயுதம் தாங்கி போராடியவர்களும் உண்டு. வழிமுறை வெவ்வேறாக இருந்தாலும் இந்திய விடு தலை என்பதை குறிக்கோளாகக் கொண்டு  மகத்தான போராட்டம் நடைபெற்று உள்ளது. 

தியாக வரலாறும் துரோக வரலாறும்

உலக வரலாற்றிலேயே ஒப்பிட முடி யாத அளவுக்கு மிகப்பெரிய மக்கள் திரள்  பங்கேற்ற போராட்டம் இந்திய விடுதலைப் போராட்டம். இந்திய விடுதலை என்பது ஒரு வீர காவியம் ஆகும். அந்த மான் சிறைச்சாலையில் கொடூரமான சித்ரவதைகளை தாங்கி, வெளிச்சமே பார்க்காமல், வெளியே வராமல் செத்துப் போனவர்கள் ஏராளமான பேர் உண்டு. ஆண்களுக்கு இணையாக, பெண்களும் வீரமாக போராடியுள்ளனர்.  இந்த மகத்தான விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத ஒரே ஒரு  அமைப்பு ஆர் எஸ் எஸ் மட்டுமே! வெள்ளை யர்களுக்கு எதிராக போராடாதது மட்டும் இல்லை, இந்த விடுதலைப் போராட்டத் தில் பங்கேற்றவர்களை காட்டிக் கொடுத்த வரலாறும் ஆர்எஸ்எஸ்க்கு உண்டு. வாஜ்பாய் விடுதலைப் போராட்ட வீரர் களை காட்டிக்கொடுத்தவர் என்பது பதிவு  செய்யப்பட்ட வரலாறு. ஏராளமான முறை வெள்ளையர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த துரோக வரலாற்றுக்குச் சொந்தக்காரர் தான் சாவர்க்கர். 

அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்காத ஆர்எஸ்எஸ் கூட்டம்

இந்தியா விடுதலை பெற்றபோது எந்த மாதிரி நமது எதிர்காலம் இருக்க வேண்டும் என்று சிந்தித்து, நம் முன் னோர்கள் அதற்கு ஏற்ற அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கினார் கள். அந்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் பல்வேறு தரப்பினரின் பங்களிப்பும் உள்ளது. ஆனால் அரசியல் சட்டத்தையே  ஏற்காதவர்கள் ஆர்எஸ்எஸ் காரர்கள். அவர்களுடைய சட்டம் என்பது மனுஸ்மி ருதி என்று சொல்லக்கூடிய மனுநீதி. அது சனாதனம் என்று அழைக்கப்படும் வர்ணாசிரம தர்மத்தை நிலை நாட்ட வேண்டும் என்று சொல்லக்கூடியதாகும். பிறப்பின் அடிப்படையிலேயே உயர்வு, தாழ்வு கற்பித்து பிரிவினை ஏற்படுத்தி, அதிகாரம் செலுத்தும் சிறு  பிரிவு சமுதாயத்தை ஆள வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. சாதிய ஏற்றத்தாழ்வு மட்டுமல்ல, பெண் களை அடிமைத்தனமாக நடத்த வேண்டும், அவர்கள் வீட்டை பராமரிக்க வேண்டும், குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும், அதைத் தவிர  சமுதாயத்தில் அவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதை ஆர்எஸ்எஸ் வலியுறுத்துகிறது.  இது ஏதோ கற்பனையான கடந்த கால  வரலாறு அல்ல. சமீபத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்த கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். அவர்கள் சொல்லக்கூடிய கலாச்சாரத்தை பாது காக்க வேண்டும், தர்மத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கவர்ச்சிகரமான வார்த்தை கள் எல்லாம், இந்தியாவின் பழங்கால, ஏற்றத்தாழ்வான, சாதிய கட்டுமானத்தை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். 

சட்டப்படி சமத்துவம் என்பதை ஏற்காதவர்கள்...

ஆனால் இந்திய அரசியல் சட்டம் அனைத்து குடிமக்களும் சமம் என்று  சொல்கிறது. நடைமுறையில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் கூட, சட்டப்படி சமத்து வத்தை வலியுறுத்துவதால் அது கோடிக் கணக்கான மக்களுக்கு வாழ்க்கையில் மேம்படுவதற்கான சட்ட வாய்ப்பு வழங்குகிறது. இந்திய அரசியல் சட்டத்தை ஆர்எஸ்எஸ் வெறுப்பதற்குக் காரணம் அவர்களுடைய வர்ணாசிரம தர்மத்தை மறுப்பதால் தான்! 

சாணக்கியனின் உருவம் உணர்த்துவது என்ன?

அதனால்தான் கடந்த 10 ஆண்டு காலத்தில் ஆட்சியில் இருக்கும், ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்கக்  கூடிய, நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, அரசியல் சட்டத்தை சீர்குலைக்கிறது. அதை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும், தகர்க்க வேண்டும் என்று விரும்புகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூட அரசியல் சட்டத்தை வடிவமைத்தவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை. அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியனின் மிகப்பிரமாண்டமான உருவத்தைத் தான் அங்கே வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் விடுதலை இந்தியாவின் அர சியல் சாசனத்தை நிராகரித்து, சனாதன வர்ணாசிரம தர்மத்தை நிலைநிறுத்தப் பார்க்கின்றனர். அதை ஒரு குறியீடாகவும் நாடாளுமன்றத்தில் வைத்துள்ளனர்.  பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்று சொல்லுவது ஏதோ ஒரு தேர்தலுக்கு, ஒரு அரசியல் கட்சிக்கு  எதிராக, மற்றொரு அரசியல் கட்சி  அல்லது அரசியல் கூட்டணி எடுக்கக் கூடிய நிலைப்பாடாக குறைத்து மதிப்பிடக் கூடாது. அப்படி புரிந்து கொள்ளவும் கூடாது. 

அம்பேத்கரின் எச்சரிக்கை

இப்பொழுது நடைபெறும் தேர்தல்  என்பது விடுதலை இந்தியா பாதுகாக்கப் படுமா? எத்தனை குறைபாடுகள் இருந்தா லும் அதில் தாக்குப்பிடித்து 75 ஆண்டு களைக் கடந்து இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா விடுதலை பெற்ற சமயம் இருந்ததைவிட கல்வி  அறிவு, அதிகரித்திருக்கிறது, சுகாதாரக் குறியீடு அதிகரித்திருக்கிறது, தொழில்  வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது,  இந்தியர் களின் ஆயுள் காலம் அதிகரித்திருக்கிறது, இந்திய ஜனநாயகம் வலுப்பட்டு இருக்கிறது, இவ்வளவும் இந்திய அர சியல் சாசனத்தின் படி அனைத்து அரசியல் கட்சிகளும் நடந்து கொண்டதால் தான் சாத்தியமானது. இந்த இந்திய அரசியல் சாசனத்தை சீர்குலைத்தால் இந்த நாடு மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்கும். அரசியல் சட்டத்தை வடிவமைத்த மாமேதை அம்பேத்கரே, எவ்வளவு நல்ல சட்டமாக இருந்தாலும், அதிகாரத்துக்கு வருபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் இந்தியா தாக்குப்பிடிக்காது என்று கூறி இருக்கிறார். எனவே திசை  திருப்பக் கூடிய எத்தனையோ மாய் மாலங்களைக் கடந்து, உண்மையான தேசபக்தர்களாக நாம் இந்தியாவை பாதுகாக்க வேண்டும். அதற்கு உடனடி யான, உறுதியான, தெளிவான, ஒரே முடிவு, பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிப்பது தான்! பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிப்பதன் மூலம் தான் இந்தியாவின் ஜனநாயகத்தை பாது காத்து, இந்திய நாட்டு மக்களுக்கு இப்போது இருப்பதை விட ஒரு நல்ல வாழ்க்கையை அமைப்பதற்கு முடியும். 

மணிப்பூர் மாதிரி...

இல்லாவிட்டால் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளிலும், பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய, முடிவற்ற, உள்நாட்டு குழப்பம், சாதி, மத, இன மோதல் ஆகியவை நடைபெறக்கூடிய ஆபத்து உள்ளது. இது ஏதோ கற்பனையில்  சொல்லக்கூடியது அல்ல. நம் கண் எதிரே  மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. தமிழகத்தில் தேர்தலுக்கு 9 முறை பயணம்  செய்த நரேந்திர மோடி, கடந்த ஓராண்டு காலத்தை நெருங்கக் கூடிய மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கோ, அங்கு இருக்கும் மக்களை பாதுகாப்ப தற்கோ, ஒரே ஒரு முறை கூட  மணிப்பூ ருக்கு செல்லவில்லை! இந்தத்  தேர்த லுக்கு கூட அவர் அங்கு செல்லவில்லை.  மக்களைப் பிளவுபடுத்தக்கூடிய அந்த தீய சக்தியை தோற்கடிப்பதால் மட்டும் தான், இந்த பழம் பெருமை வாய்ந்த  மகத் தான சிறப்பு வாய்ந்த இந்திய திருநாட்டை பாதுகாக்க முடியும், பாதுகாப்போம்!  நாம் வெல்லுவோம்!


 

;