states

img

மதச்சார்பின்மையும் சமூக நீதியும் பாதுகாப்போம் பாஜகவிடம் இருந்து விலகி நிற்போம்

கொச்சி, ஏப்.19- மக்களவைத் தேர்தலில் பாஜ கவிடம் இருந்து விலகி இருக்குமாறும், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதியின் அடிப்படையிலான அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடிக்கு மாறும் கேரள லத்தீன் கத்தோலிக்க கவுன்சில் (கேஆர்எல்சிசி) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து கேஆர்எல்சிசி இன் தலைவர் பிஷப் டாக்டர். வர்கீஸ்  சாகலக்கல் கொச்சியில் நடந்த செய்தி யாளர் சந்திப்பில் மேலும் கூறிய தாவது: மதிப்பு அடிப்படையிலான முன்னணிக்கு வாக்களியுங்கள். இடது  மற்றும் வலது முன்னணிகளுடன் (எல்டிஎப், யுடிஎப்) சமமான நிலைப்பாட்டை எடுப்போம். இந்தியா வில் ஜனநாயக அமைப்பு பலவீன மடைந்து வருவது கவலையளிக்கிறது. நாட்டின் மதச்சார்பின்மை ஆபத்தான முறையில் கேள்விக்குறியாகி வரு கிறது. மணிப்பூர் உள்ளிட்ட மாநி லங்களில் கிறிஸ்தவர்கள், வழிபாட்டுத் தலங்கள், சமூக சேவை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து தாக்கு தலுக்கு உள்ளாகின்றன என்றார்.

கேஆர்எல்சிசி என்பது மாநிலத்தில் லத்தீன் கத்தோலிக்க திருச்சபையின் மிக உயர்ந்த கொள்கை உருவாக்கும்  ஒருங்கிணைப்புக் குழுவாகும். ஜீவநாதம் நாளிதழில் பாஜகவுக்கு ஆதரவான கட்டுரை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் கேஆர்எல்சிசி நிர்வாகிகள் தெரி வித்தனர். துணைத் தலைவர் ஜோசப் ஜூட், பொதுச் செயலாளர் சகோதரர்.  தாமஸ் மாடி, இணை ஒருங்கிணைப் பாளர் ஷெரி ஜே தாமஸ் உள்ளிட் டோரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

;