states

img

ஒன்று கூடிய கன்னடர்கள் கர்நாடகாவில் மதக்கலவரத்தை தூண்டும் பாஜக திட்டம் தவிடுபொடியானது

கர்நாடக மாநிலம் ஹூப்  பள்ளி-தார்வாட் பகுதி யைச் சேர்ந்த நிரஞ்சன் ஹிரேமத் என்பவரின் மகள் நேஹா  (22) ஹூப்பள்ளி வித்யாநகரில் உள்ள கல்லுாரியில், எம்சிஏ முத லாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஏப்ரல் 22 அன்று கல்லூரி வளாகத்தில் நேஹாவை காதல்  விவகாரம் தொடர்பாக பயாஸ் (22)  என்ற மாணவர் கத்தியால் குத்தி கொன்றார். இந்த சம்பவம் தொடர்  பாக பயாஸை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். தனிப்பட்ட காதல் விவ காரத்தை மக்களவை தேர்தல் பிரச்  சாரப் பொருளாக எடுத்த பாஜக  “லவ் ஜிகாத்திற்கு” மறுத்ததால்  நேஹாவை, பயாஸ் கொலை செய்  ததாக குற்றம் சாட்டினர். மேலும்  பாஜக தேசிய தலைவர் நட்டா ஒன்  றிய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி  மற்றும் பாஜக எம்பிக்கள், எம்எல்ஏக்  கள் நேஹா வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோருக்கு ஆறு தலும் கூறினர்.

ஆனால் தனிப்பட்ட காரணங்க ளுக்காக கொலை நடந்தது என்று  கர்நாடக முதல்வர் சித்தராமையா  கூறிய நிலையில், பயாஸும், நேஹாவும் காதலித்த விஷயம்  விசாரணையில் வெளியாகியுள் ளது என மாநில உள்துறை அமைச்  சர் பரமேஸ்வராவும் உறுதிப் படுத்தினார்.

தந்தையின் கருத்தால் பாஜக அதிர்ச்சி
நேஹாவின் தந்தையும் காங்கி ரஸ் கவுன்சிலருமான நிரஞ்சன், “பல முஸ்லிம் அமைப்பினர், எங்க ளுக்கு ஆதரவாக உள்ளனர். ஒரு வர் செய்த தவறுக்காக, ஒட்டு மொத்த சமூகத்தை குறை சொல்ல  முடியாது” எனக் கூறினார். மேலும் சமீபத்தில் பெங்களூரில் ருக் ஷானா என்ற இஸ்லாமிய பெண்ணை,  பிரதீப் என்பவர் காதலித்து ஏமாற்  றினார். திருமணம் செய்ய கூறிய தால் ருக் ஷானாவை எரித்து கொன்று  உள்ளார். இதே காதல் விவ காரத்தால்தான் ஹூப்பள்ளியில் நேஹா கொலை செய்யப்பட்டு உள்ளார். 

பிரதீப் -  ருக் ஷானா விவகாரத்  திற்கு கண்டனம் தெரிவிக்காத வர்கள் நேஹா - பயாஸ் விவகா ரத்திற்கு மட்டும் போராட்டம் நடத்துவது ஏன்? இந்து வாலிபர்  முஸ்லிம் பெண்ணை கொன்றால் பாஜக அமைதியாக இருக்கிறது. ஆனால் இந்து பெண்ணை முஸ் லிம் வாலிபர் கொன்றால் லவ் ஜிஹாத் என ஓடி வருவது ஏன்? ஆனால் இரண்டுமே தனிப்பட்ட காதல் விவகாரம். மதம் சார்ந்த நிகழ்வுகள் கிடையாது என கன்ன டர்கள் போஸ்டருடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

நேஹாவின் மரணத்தை வைத்து மத அரசியல் ஆதாயம்  தேட முயற்சித்த பாஜகவினருக்கு மாணவியின் தந்தையும், நெட்டிசன்களும், ஒட்டுமொத்த கன்னடர்களும் தனது கருத்து மூலம் பதிலடி கொடுத்த சம்பவம்  பலத்த பாராட்டுகளை பெற்றுள்ள  நிலையில், மதக் கலவரம் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி  தவிடு பொடியானது.

;