internet

img

கூகுள் பிளே ஸ்டோரில் மொழிபெயர்ப்பு வசதி

ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களை பதிவிறக்கும் தளமான கூகுள் பிளே ஸ்டாரில் புதிதாக மொழிபெயர்ப்பு வசதி அறிமுகமாக உள்ளது. 

கூகுள் நிறுவனத்தின் பிளே ஸ்டோர், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு அப்ளிகேஷன்களைக் கொடுக்கிறது. இதில் அண்மைக் காலமாக புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், ஒவ்வொரு அப்ளிகேஷனிலும் அந்த அப்ளிகேஷன் பற்றிய தகவல் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் இருந்தால் அதனை மொழிபெயர்க்கும் வசதி அறிமுகமாக உள்ளது. 

பிற மொழியில் உள்ள ஆப் பற்றிய தகவல்களுக்கு கீழ் ’டிரான்ஸ்லேட்’ வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பிற மொழிகளில் உள்ள ஆப் தகவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம். தற்போது இதனை கூகுள் நிறுவனம் பரிசோதித்து வருகிறது. விரைவில் பொது பயன்பாட்டுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி பிளே ஸ்டோரின் தோற்றத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன. இரு நாட்களுக்கு முன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யும் வசதியும் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


;