india

img

போலிச்சாமியார் ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், போலிச் சாமியாரு மான பாபா ராம்தேவ் தனது பதஞ்  சலி நிறுவனத்தின் வருமான சுயநலத்  திற்காக ஆங்கில (அலோபதி) மருத்து வத்தின் தரத்தை சீர்குலைக்கும் வகை யில் விளம்பரம் வெளியிட்டார். இதனை  எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம் தொட ர்ந்த வழக்கில் பதஞ்சலி நிறுவனர் ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குநர் பாலகிருஷ்ணா ஆகியோர் பொது மன்னிப்புக் கோர உச்சநீதிமன்றம் உத்த ரவிட்டது. இதனையடுத்து பொது மன்  னிப்புக் கோரி ஒரு சில ஆங்கில மற்றும் இந்தி மொழி பத்திரிகைகளில் பதஞ்சலி நிறுவனம் மிக சிறிய அளவிலான விளம்  பரத்தை வெளியிட்டது. 

இந்நிலையில், பதஞ்சலி நிறுவனம் தொடந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கள் ஹிமா கோலி, அமானுல்லா அமர்வு  முன்பு செவ்வாயன்று மீண்டும் விசார ணைக்கு வந்த நிலையில், பத்திரிகை களில் வெளியிடப்பட்ட பொதுமன்னிப் புக் கோரும் விளம்பர நகலை பதஞ்சலி  நிறுவன வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

இதனை கண்ட நீதிபதிகள்,”இது போன்ற சிறிய அளவில் தான் வெளியிடு வீர்களா? விளம்பரங்களின் நகலை பெரிது  படுத்தி எடுத்துவராமல் வந்துள்ளீர்கள்? பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்  பர பத்திரத்தை எடுத்து வர வேண்டும், அப்போது தான் சரியான அளவு தெரியும். 

எடுத்த நடவடிக்கை என்ன?
மருந்து விளம்பரங்களுக்கு கட்டுப் பாடு விதிக்கும் 170ஆவது பிரிவை திடீ ரென நீக்கியது ஏன்? அந்த பிரிவை மீண்  டும் சேர்க்க உத்தரவிட்டும் அதனை  ஒன்றிய அரசு செய்யாதது ஏன்? பதஞ்  சலி நிறுவனத்தின் போலி விளம்பரங்க ளுக்கு எதிராக ஒன்றிய அரசின் துறை கள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? 2018  முதல் போலி விளம்பரங்களை தடுக்க  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும்  மருந்து விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு  விதிப்பது தொடர்பாக தகவல் ஒளி பரப்பு துறை பதிலளிக்க வேண்டும்” என  உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக சாடினர். பின்னர், வழக்கு விசாரணை யை ஏப்ரல் 30க்கு ஒத்திவைத்தனர்.

;