india

img

தேர்தல் பத்திரம் மீண்டும் கொண்டுவரப்படும் - நிர்மலா சீதாராமன்

2024-இல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சட்டவிரோதமானது எனக் கூறி உச்சநீதிமன்றம் ரத்து செய்த தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டுவர உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
தேர்தல் பத்திர திட்டம் சட்டவிரோதமானது எனக் கூறி கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி அவற்றை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். மேலும் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்தும்படி எஸ்.பி.ஐ வங்கிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. பின்னர் தேர்தல் பத்திரம் குறித்து அனைத்து விவரங்களையும் வெளியிடும்படி உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்த நிலையில், எஸ்.பி.ஐ அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் அளித்தது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட இந்த தரவுகளை ஆய்வு செய்தபோது, இந்த திட்டத்தின் மூலம் பாஜக அரங்கேற்றிய பிரம்மாண்ட  முறைகேடுகள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அமலாக் கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை வைத்து மிரட்டியும், ஒன்றிய திட்ட  ஒப்பந்தங்களை அளித்தும் தேர்தல் பத்திரம் மூலமாக ரூ.8,000 கோடிக்கும் அதிகமாக மோடியின் பாஜக கல்லா கட்டியுள்ளது தெரியவந்தது.
இந்த நிலையில், 2024-இல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டுவர உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நீதிமன்ற தீர்ப்புகளை பாஜக மதிக்காது என்பதை உறுதிபடுத்தியுள்ளது.
 

;