india

img

தமிழ்நாடு மின் வாரியத்துக்கு நிலக்கரி விற்றதில் அதானி நிறுவனம் முறைகேடு!

இந்தோனேசியாவில் இருந்து வாங்கிய தரம் குறைந்த நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 3 மடங்கு விலை அதிகமாக அதானி நிறுவனம் விற்று முறைகேடு செய்தது அம்பலமாகியுள்ளது.
2014-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, நிலக்கரியின் விலை, தரத்தை உயர்த்தி காட்டுவதற்கு பல்வேறு நாடுகள் வழியாக வருவதுபோல் போலி ஆவணங்கள் தயாரித்து அதானி நிறுவனம் முறைகேடு செய்துள்ளது. இந்தோனேசியாவில் இருந்து வாங்கிய தரம் குறைந்த நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 3 மடங்கு விலை அதிகமாக அதானி நிறுவனம் விற்று முறைகேடு செய்துள்ளது. இந்தோனேசியாவில் ஒரு டன் நிலக்கரியை ரூ.2,300க்கு வாங்கி, தமிழ்நாட்டுக்கு வரும்போது ஒரு டன் ரூ.7,650 என நிர்ணயம் செய்துள்ளது. இந்த முறைகேட்டை OCCRP ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளது.
 

;