india

img

தீக்கதிர்முக்கிய செய்திகள்

சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்தரப்பிர தேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுடன் சுமார் 1850 கிமீ பரப்பளவு எல்லைப் பகுதியை நேபாள நாடு பகிர்ந்து கொள்கி றது. நேபாள எல்லையில் உள்ள லிபுலேக், லிம்பியா துரா மற்றும் காலாபானி ஆகியவற்றை இந்திய அர சாங்கம் பராமரித்து வரும் நிலையில், மேற்குறிப்  பிட்ட 3 பகுதிகளை தங்கள் நாட்டு  வரைபடத்துடன் சேர்த்து 100 ரூபாய் நோட்டுக்களில் அச்சிட்டுள்ளது  நேபாள அரசு. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்பி யான  பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்  பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்  கப்படும் என்று கர்நாடக மாநில அரசு அறிவித் துள்ளது.

காஷ்மீரில் விமானப்படை வாகனம் மீது  பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி யது கோழைத்தனமானது என  காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவிஷீல்டு பக்கவிளைவு குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலிச்  செய்திகள் பரவி வருகின்றன. இதனால் இந்திய மக்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் ஸ்டேஷன் மாஸ்டர் தூங்கிய தால், சிக்னல் கிடைக்காமல் அரைமணி நேரம் தாம தமாக ரயில் புறப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சி அலை யை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இடஒதுக்கீட்டுக்கு எதிரா னவர்; அவர் மக்களிடம் இருந்து இட ஒதுக்கீட்டை பறிக்க விரும்புகிறார் என்று ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பணிபுரி யும் 57 வயதான பிஎஸ்எப் மூத்த ஜவான் ஞாயி றன்று மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து  கொண்டார்.

தேர்தல் விதிகளை மீறியது தொடர்பாக பாஜக  தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேச தலை வர் சந்திரபாபு நாயுடு மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் உள்ள குருத் வாராவில், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப்பின் சில பக்கங்களைக் கிழித்த தாகக் கூறி 19 வயது இளைஞன் நேற்று அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். 

சபரிமலையில் இனி பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிச னத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என திரு விதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பாட்னா
‘பாஜக - பதற்றப்படுத்தும் பொய்யான கட்சி’

தோல்வி பயத்தால் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக வினர் தெருக்குழாய் சண்  டையில் பேசுவதைப் போல மிகவும் இழி வாக பேசி பிரச்சாரம் மேற்கொண்டு வரு கின்றனர். சனியன்று பீகார் மாநிலத்தில்  நடைபெற்ற பிரச்சா ரப் பொதுக்கூட்டத் தில் பிரதமர் மோடி,”சனாதனத்திற்கு ஆபத்து. மக்கள் ஜாக்கிரதையாக இருக்க  வேண்டும்” எனக் கூறி பிரச்சாரம் மேற் கொண்டார். 

இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சிற்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலை வரும், பீகார் முன்னாள் துணை முதல்வ ருமான தேஜஸ்வி பதிலடி கொடுத்துள் ளார். அதில், “பிரதமர் மோடி சனாதன தர்மத்தை சேர்ந்தவர். அதே போல குடி யரசு தலைவரும் சனாதன தர்மத்தவரே ஆவார். குறிப்பாக நம் நாட்டின் முப்படை  தளபதிகளும், மாநில முதல்வர்களும், ஆளுநர்களும் என அனைவருமே சனா தன தர்மத்தைச் சேர்ந்தவர்கள் தான். இதன் பிறகும் சனாதனத்திற்கு ஆபத்து என்று பிரதமர் எப்படி கூறுகிறார்? சமூ கத்தை பிரித்து ஆட்சி செய்யவே மோடி  இவ்வாறு கூறி வருகிறார். இவர்களது வலையில் மக்கள் சிக்கி விடாமல் கவன மாக இருக்க வேண்டும். பாஜக என்பதன்  அர்த்தம் “பதற்றப்படுத்தும் பொய்யான கட்சி (படுகாவ் ஜுட்டா பார்ட்டி)” என பேசி பதிலடி கொடுத்துள்ளார்.

புதுதில்லி
பிரஜ்வல் தப்பியோடும் திட்டம் மோடிக்கு தெரியும்

பாஜக கூட்டணி கட்சியான மதச்  சார்பற்ற ஜனதா தளத்தின்  எம்பி பிரஜ்வல் ரேவண்ணா  300 பெண்களை பாலி யல் வன்கொடுமை  செய்த 3000 ஆபாச வீடியோ வெளியான வுடன் ஐரோப்பா நாடான ஜெர்மனி யில் பதுங்கியுள்ளார். வெள்ளியன்று அவர்  துபாய் வந்துள்ளதாகவும், அவரை கைது  செய்ய கர்நாடக சிஐடி போலீசார் தயார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்  நிலையில், “பிரஜ்வல் ரேவண்ணா வெளி நாட்டிற்கு தப்பியோட உதவியது பாஜக  தான்” என ஆம் ஆத்மி மூத்த தலைவரும்,  மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் சிங்  குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர்  மேலும் கூறுகையில், “பிரஜ்வல் ரேவண்ணா  வெளிநாட்டிற்கு தப்பியோட அனைத்து உதவிகளையும் பாஜக தான் செய்துள் ளது. பாஜகவின் உதவியின்றி அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல வாய்ப்  பில்லை. குறிப்பாக பிரஜ்வல் ஜெர்ம னிக்கு வெளிநாட்டிற்கு தப்பியோடும் திட்டம் மோடிக்கு தெரியும்” என அவர்  கூறியுள்ளார். சஞ்சய் சிங்கின் இந்த குற்றச்  சாட்டால் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

;