india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

“ப்ளையிங் வெட்ஜ் டிபென்ஸ்” நிறுவனம் உருவாக்கிய இந்தி யாவின் முதல் உள்நாட்டு ஆளில்லா குண்டுவீச்சு விமானம் (யுஏவி விமானம்-எப்டபிள்யூடி-200பி) அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியுடனான காங்கிரஸ் கூட்ட ணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்தர் சிங் லவ்லி சனியன்று பாஜகவில் இணைந்தார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 7 வழக்குகளில் ரூ.46 கோடி மோசடி செய்த ஜிஎஸ்டி அதிகாரிகள் 5 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

“ரேவ் பார்ட்டி” எனச் சொல்லப்படும் இளம் தலைமுறையின் கிளப் நடனப் பார்ட்டிக ளில் கலந்து கொண்டு, தடை செய்யப்பட்ட போதைப்பொருளான பாம்பு விஷம் பயன்படுத்தி யது தொடர்பான விவகாரத்தில் யூடியூபர் எல்விஷ்  யாதவ் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

மாளிகைகளில் வசிக்கும்  பேரரசர் மோ டிக்கு  விவசாயிகள் மற்றும் பெண்களின் நிலை குறித்து எப்படி தெரியும் என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபரத்தில் குழந்தைகளை வைத்து பிரச்சாரம் மேற் கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது, ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஒடிசாவின் பூரி மக்களவைத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொஹந்தி திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

போலி செயலிகளிடம் பொதுமக்கள் ஏமா றாமல் இருக்க அரசு மற்றும் அரசு நிறு வனங்களின் செயலிகளுக்கு தனி பேட்ஜ் அடை யாளத்தை வழங்க கூகுள் முன்வந்திருக்கிறது.

சந்தேஷ்காளி விவகாரத்தை பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து ஏன் பேசவில்லை? என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

அகமதாபாத் 
காங்கிரஸ் கட்சிக்கு
 வாக்களிக்க
ராஜபுத்திரர்கள் உறுதிமொழி

வடமாநிலங்களில் பாஜகவிற்கு எதிரான ராஜபுத்திரர்களின் எதிர்ப்பு அலை தீவிரமடைந்து வரும் நிலையில், குஜராத், உத்தரப்பிர தேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்க ளில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சா ரம் செய்யும் பாஜக வேட்பாளர்களை ராஜ புத்திரர்கள் விரட்டியடித்து வருகின்ற னர். குறிப்பாக குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் 3க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதியில் ராஜபுத்திரர்கள் பொதுக்கூட்டங்களை நடத்தி “பாஜக விற்கு வாக்களிக்க மாட்டோம்” என உறுதி மொழி ஏற்று வருகின்றனர். இதனால் ஜாம்நகர், பாவ்நகர், பாரூச் உள்ளிட்ட 7 மக்களவை தொகுதிகளில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துள் ளது.

இந்நிலையில், வெள்ளியன்று ஜாம்நகர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்   “பாஜக விற்கு வாக்களிக்க மாட்டோம்” என ராஜ புத்திரர்கள் உறுதிமொழி ஏற்று “காங்கி ரஸ் கட்சிக்கு வாக்களிப்போம்” என அறிவித்துள்ளனர். ஜாம்நகர் ராஜபுத்திர மகாஜன சபையின் இந்த அறிவிப்பை குஜராத் மாநிலம் முழுவதும் செயல் படுத்த ராஜபுத்திரர்களின் மாநில தலைமை திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த அறி விப்பு பாஜகவிற்கு நடுக்கத்தை ஏற் படுத்தியுள்ளது.

கொல்கத்தா
பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க புலனாய்வுக் குழு
 கேரளாவிற்கு ஓட்டம் பிடித்த மேற்குவங்க ஆளுநர்


கேரளாவைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான வருமான சி.வி.ஆனந்த் போஸ் மேற்கு வங்க மாநில ஆளுநராக உள்ளார். இவர் தன்னுடைய ஆளுநர் மாளிகையில் பணி புரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவ ருக்கு நிரந்தர வேலை வழங்குவதாக கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஹரே ஸ்ட்ரீட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், எனது புகார் மீது விசாரணை மேற் கொள்ள மாநில போலீசார் ஆளுநர் மாளி கைக்கு வரக்கூடாது என சி.வி.ஆனந்த் போஸ் அறிக்கை வெளியிட்டார். 

இந்த அறிக்கையை கண்டுகொள்ளா மல் மேற்கு வங்க அரசு பாலியல் புகார் குறித்து விசாரிக்க 8 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (சிஐடி) அமைத்து,  புகார் அளித்த பெண் உட்பட ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் சில ஊழியர்க ளுக்கு சம்மனும் அனுப்பியுள்ளது. இத னால் தன் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என அறிந்து கொண்ட ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் தனது சொந்த மாநிலமான கேரளாவிற்கு ஓட்டம் பிடித்துள்ளார்.

;