india

நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்க!

புதுதில்லி, ஏப்.22- தேர்தல் நடத்தை விதிகளை மீறி மிக மோசமாக பேசிக்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தலைமைத் தேர்தல் ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் சாராம்சம் வருமாறு: ஏப்ரல் 22 தில்லிப் பதிப்புகளில் தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய நாளேடுகளின் முகப்புப் பக்கங்களில் வெளியாகியுள்ள, பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கள் அனைத்துமே, 2024 தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராகக் கக்கிய வெறித்தனமான பேச்சுகள் ஆகும். ஏப்ரல் 21 அன்று ராஜஸ்தான் மாநி லத்தில் பன்ஸ்வாரா என்னுமிடத்தில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரை யாற்றும்போது, முஸ்லிம்களை ஜாடையாகக் குறிப்பிட்டு, “நாட்டிற்குள் ஊடுருவியவர் களுக்கு, அதிக அளவில் பிள்ளைகள் பெறுகிற வர்களுக்கு, கடினமாக உழைத்த உங்கள் பணத்தைக் கொடுக்கப் போகிறீர்களா?” என்று  பேசியதாக வெளிவந்திருக்கிறது.  

இவ்வாறு  இந்த செய்தித்தாள்களில் வந்திருப்பது மட்டு மல்லாமல், இவருடைய பேச்சு, பிரதான ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் விரி வான அளவில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிவைத்துத் தாக்கிப் பேசுவது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123(3)ஆவது பிரிவு மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை முழுமை யாக மீறிய செயல் என்பதை தலைமைத் தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ளும் என்றே  கருதுகிறேன். தேர்தல் நடத்தை விதி மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கும் அப்பாற் பட்டு தலைமைத் தேர்தல் ஆணையமும் பொய்ச் செய்திகள், மதம் மற்றும் வெறுப்பை  உமிழ்ந்து பேசுவதற்கு எதிராக அனைத்து அர சியல் கட்சிகளுக்கும் பொதுக் கூட்டங்களில் எவ்வாறு உரையாற்ற வேண்டும் என்று  அவ்வப்போது அறிவுரைகளும் அனுப்பிக் கொண்டிருக்கிறது.  

தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய சுற்றறிக்கை 2024 மார்ச் 1 அன்று வெளிவந்திருக்கிறது.   மோடி மீது தொடரும் புகார் பிரதமர் மோடி, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் கட்டளைகளைக் கிஞ்சிற்றும் மதித்திடாமல் அப்பட்டமாக மீறி  செயல்பட்டுக்கொண்டிருப்பது குறித்து, தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு இதற்கு முன்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவ னத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. 2024 ஏப்ரல் 13 அன்று இதுபோன்ற முறையீடு ஒன்றை நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருக்கிறோம். அதில், பிரதமர் மோடி, அயோத்தியில் ராமர் கோவில் கும்பா பிசேகம் நடைபெற்றதையும், மதத்தை யும் பயன்படுத்தி, “எதிர்க்கட்சிகள் ராமருக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன” என்று முத்திரை குத்தியதை சுட்டிக்காட்டி இருந்தோம்.

ஆயினும் இந்த முறையீடு தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் என்ன நட வடிக்கை எடுத்தது என்பது குறித்து இது வரை எவ்விதத் தகவலையும் நாங்கள் பெற வில்லை என்பதை வருத்தத்துடன் தெரி வித்துக் கொள்கிறோம்.   இதுபோன்ற வெறுப்புப் பேச்சுகள் மிகவும்  வெட்கக்கேடானவையாகும். இதுபோன்ற வெறுப்பு பேச்சுகளை உமிழ்ந்தவர்களுக்கு எதி ராக தேர்தல் ஆணையம் தடை விதித் திருக்கும் முன்னுதாரணங்கள் உள்ளன. இப்போது அனுப்பியுள்ள முறையீட்டின் மீதும் தலைமைத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும்  பாரதிய ஜனதா கட்சி மற்றும் நரேந்திர மோடி க்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்து கிறோம்.

  மதவெறி உணர்வுகளையும் வெறுப்பை யும் தூண்டியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப் பட வேண்டியது அவசியமாகும். பொது  விவாதங்கள் மேலும் சீரழிந்து வீழ்ச்சியடையா திருந்திடவும், இதுபோன்ற பேச்சுகள் மேலும் தொடராது தடுக்கப்படுவதற்கும், இதுபோன்ற பேச்சுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும் இவற்றுக்கு எதிராக ஒரு பொருத்தமான நடவடிக்கையை தலைமைத் தேர்தல்  ஆணையம் எடுக்காமல் தோல்வியுறுமானால், தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு சுயேச்சையான மற்றும் சுதந்திர மான நிறுவனம் என்கிற அதன் நம்பகத்தன்மை யிலிருந்து அது மேலும் அரிக்கப்படும். அது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கான சூழலை மேலும் சீர்குலைத்திட இட்டுச் செல்லும்.” இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். (ந.நி.)

;