india

img

உயிர்த்தெழுகிறது சந்தேஷ்காளி

கொல்கத்தா, ஏப்.24- மேற்கு வங்கத்தின் சந்தேஷ் காளியில் அச்சத்தையும் பயங்கரச் சூழலையும் தகர்த்து, இடது முன்ன ணிக்கு ஆதரவாக மக்கள் அணி வகுத்து வருகின்றனர். பெண் களுக்கு எதிரான பாலியல் வன் முறை உட்பட திரிணாமுல் தாக்கு தல்கள் நடந்த இடம் சந்தேஷ் காளி. இங்கு நடந்த நில அபக ரிப்புக்கும் நரவேட்டைக்கும் எதி ராக வலுவான போராட்டத்தை நடத் தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மக்களவைத் தேர்தலில் சந்  தேஷ்காளி உள்ளடக்கிய பஷீர்கட்  தொகுதியில் சிபிஎம் ஒரு வலு வான போராட்டத்தை நடத்துகிறது.

தாக்குதல்களுக்குப் பிறகு பல  வருடங்கள் கழித்து, மக்கள் அங்கு மீண்டும் செங்கொடி உயர்த்தினர். 2011இல் மாநிலத்தில் திரிணாமுல் ஆட்சிக்கு வந்த பிறகு, தொடங்  கிய தாக்குதல்களும் அடக்குமுறை களும் அனைத்து எல்லைகளையும் தாண்டி தொடர்ந்தன. மாநிலத்தின் பல பகுதிகளைப் போலவே, சந்  தேஷ்காளியிலும், பத்து ஆண்டு களில் நடந்த அனைத்து தேர்தல்களி லும் திரிணாமுல் தவிர வேறு எந்த  கட்சியும் செயல்பட முடியாது. திரி ணாமுல் தலைவர்களைத் தவிர வேறு யாருக்கும் வாக்களிக்க சாதா ரண மக்கள் அச்சமடைந்தனர்.

மக்  களை பயத்திலும், பீதியிலும் நிலை  நிறுத்தியதன் மூலம் திரிணாமுல்  கட்சியினர் இங்கு வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். கொள்ளை, நில அபகரிப்பு மற்  றும் பெண்களை பாலியல் வன்  கொடுமை செய்வது சகஜமாகி விட்டது. பொறுமை இழந்த மக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் காட்சிக்கு வந்தபோது, திரிணாமுல் கட்சியினர் பதுங்கினர். மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, ஷேக்  ஷாஜகான் உள்ளிட்ட திரிணாமுல்  தலைவர்கள் கைது செய்யப்பட்ட னர். அவர்களின் சொத்துக்களை மத்திய புலனாய்வு அமைப்புகள் பறிமுதல் செய்தன. மாநிலச் செய லாளர் முஹம்மது சலீம், அரசியல்  தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் ஆகியோர் தாக்கு தல் மற்றும் கொள்ளைக்கு எதிராக சிபிஎம் நடத்திய போராட்டத்திற்கு தலைமை தாங்கினர்.

திரிணா முல் வன்முறையால் பல ஆண்டு களாக நிறுத்தப்பட்டிருந்த சிபிஎம்- இன் செயல்பாடு இந்தப் போராட்  டத்தின் மூலம் மீண்டும் உயிர்பெற் றது. போராட்டங்களுக்கு தலைமை  தாங்கியதற்காக சிறையில் அடைக் கப்பட்டவர் நிரபத் சர்தார். சிபிஎம்  மாநிலக் குழு உறுப்பினரும், அகில  இந்திய விவசாயத் தொழிலாளர் சங்  கத்தின் மாநிலச் செயலாளருமான இவர்தான் சந்தேஷ்காளியை உள் ளடக்கிய பாசிர்கட் தொகுதியின்  இடது முன்னணி வேட்பாளர். சந்  தேஷ்காளியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான நிரபத் சர்தா ருக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு  உள்ளது.

விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள் அதிகம் உள்ள இத்தொகுதியில் வாக்காளர் கள் செங்கொடியுடன் சர்தாருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வரு கின்றனர். தற்போதைய நாடாளு மன்ற உறுப்பினரான நசுருல் இஸ்லாம் திரிணாமுல் கட்சிக்கும், ரேகா பத்ரா பாஜகவுக்கும் வேட்பா ளர்கள்.

;