india

img

பெங்களூரு 800 விவசாயிகளின் மனைவிகளது தாலியைப் பறித்தவர் மோடி! பிரியங்கா காந்தி பதிலடி

18-ஆவது மக்களவை தேர்த லில் “இந்தியா” கூட்டணி  அபார வெற்றி பெற்று ஆட்சி யை கைப்பற்றும் என பெரும்  பாலான கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருவதால் தோல்வி பயத்தில் பாஜக திக்குமுக்காடி வரும் நிலையில், பிரதமர் மோடி இந்து - முஸ்லிம் மக்களிடையே வன்முறையை தூண்டும் வகை யில் வெறுப்பு பேச்சுக்களை வரம்பு  மீறி கட்டவிழ்த்து விட்டு வருகிறார். 

கடந்த ஞாயிறன்று ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடை பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரத மர் மோடி,”அதிக குழந்தை பெற்  றுக் கொள்பவர்கள் ; ஊடுருவல்  காரர்கள்” என முஸ்லிம்களை இழிவுபடுத்தியும்,  தங்களிடம் உள்ள தங்கம் மற்றும் மாங்கல் யத்தை காங்கிரஸ் கட்சி பறித்துக் கொள்ள முயன்றதாகவும், இனி மேல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்க ளித்தால் தங்கம் மற்றும் மாங்கல் யத்தை மொத்தமாக பறித்து விடு வார்கள் என வெறுப்பைக் கக்கி னார். 

மோடியின் இந்த பேச்சிற்கு “இந்தியா” கூட்டணி உட்பட நாடு  முழுவதும் அனைத்து தரப்பின ரும் கண்டனம் தெரிவித்து வரும்  நிலையில், “எனது பாட்டி நாட்டிற் காக தங்கத்தையும், எனது தாய்  நாட்டிற்காக தாலியையும் தியாகம்  செய்துள்ளனர்” என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பொதுச்செய லாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் இதுகுறித்து  அவர் மேலும் கூறுகையில், “பாஜக வின் தேர்தல் பிரச்சாரத்தை டிவியில் பார்த்தால் வளர்ச்சித் திட்டங்கள் அல்லது செயல்படுத்திய திட்டங் கள் குறித்த எந்த அறிக்கையும் இருக்காது. ஆனால் பைத்தியக்கா ரத்தனமான பேச்சுகள் நிறைந்தி ருக்கும். இந்த தேர்தலில் 400  இடங்களை வென்று, அரசியல மைப்பை மாற்றுவோம் என்ற வகை யில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்  கிறார். சில சமயங்களில் மதத்தைப்  பற்றி பேசுகிறார். கொஞ்சம் சிந்தித் துப் பாருங்கள். உலகின் மிகவும் தகுதியான நாட்டில் வாழும் நாம் இதுபோன்ற குறைமதிப்பான பேச்சுகளையெல்லாம் கேட்க தகுதியானவர்களா? காங்கிரஸ் மாங்கல்யத்தைக்கூட பறித்து விடும் எனப் பேசுகிறார். நாடு  சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள்  முடிந்திருக்கிறது. காங்கிரஸ் 55 ஆண்டுகள் ஆட்சி செய்தது. உங்  கள் மாங்கல்யத்தை (தாலி) யாரா வது கொள்ளையடித்திருக்கி றார்களா? இந்தியா - சீனா போரின்  போது அப்போதைய காங்கிரஸ் தலைவர் இந்திராகாந்தி தன்  தங்கத்தை போருக்காக வழங்கி னார். என் தாய் தன் மாங்கல்யத்தை  இந்த நாட்டிற்காக தியாகம் செய் தார். முதலில் பிரதமர் மோடிக்கு மாங்கல்யத்தின் முக்கியத்துவம் புரிந்திருந்தால் இப்படியெல்லாம் பேசியிருக்கமாட்டார். பணமதிப்பி ழப்பு நடவடிக்கையின் போது பெண்களின் சேமிப்பை பறித்த  அவர், விவசாயிகளின் போராட்  டத்தின்போது, 800 விவசாயி களின் உயிரைப் பறித்து, அந்த விவ சாயிகளின் மனைவிகள் மாங்கல் யத்தைப் பறித்திருக்கமாட்டார்” என ஆவேசமாக குறிப்பிட்டார்.

பிரதமர் இப்படி எல்லாம் பேசக் கூடாது

மோடிக்கு சிரோமணி அகாலி தளமும் கண்டனம்

பாஜகவிற்கு மிக நெருக்கமான கூட்ட ணிக் கட்சியான சிரோமணி அகாலி தளமும் மோடிக்கு எதிராக கருத்து தெரி வித்துள்ளது. இதுகுறித்து சிரோமணி அகாலிதள தலைவர் சுக்பீர் சிங் பாதல்  கூறுகையில்,”பணக்காரனாக இருந்தா லும், ஏழையாக இருந்தாலும், இந்துவாக  இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தா லும், முஸ்லிமாக இருந்தாலும் சரி, நாட்  டின் பிரதமர் இப்படிப்பட்ட அறிக்கை யை வெளியிடக்கூடாது. இந்த நாடு அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானது என்பதை பாஜக விடம் வலியுறுத்த விரும்புகிறேன். நமது சொந்த நாட்டு மக்களி டையே வகுப்புவாத வெறுப்பு, பரஸ்பர சந்தேகம் மற்றும் விஷத்தை பரப்பும் அறிக்கைகளை பிரதமர் பேசி இருக்கக் கூடாது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிரோமணி அகாலி தளம் பாஜகவின் மிக நெருங்கிய கூட்டாளி யாக இருந்த நிலையில், விவசாய போராட்டம் காரணமாக மக்க ளவை தேர்தலில் கூட்டணி வேண்டாம் என ஓட்டம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

;