india

img

மோடி வெறுப்பு பேச்சு: 93 ஓய்வுபெற்ற குடிமைப்பணி அதிகாரிகள் கண்டனம்

ராஜஸ்தானில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி முஸ்லிம்களுக்கு எதிரான பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சுக்கு, 93 ஓய்வுபெற்ற குடிமைப்பணி அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பேரணியில், முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்கள் என்றும், காங்கிரஸ் வெற்றி பெற்றால் நாட்டின் செல்வம் முஸ்லிம்களுக்கு பங்கிடப்படும் என்றும் மோடி பேசினார். மோடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை குறித்து அகமதாபாத் ஐஐஎம் முன்னாள் பேராசிரியர் ஜக்தீப் சோக்கர் தேர்தல் ஆணையத்தில் புகார்  அளித்தார். பேராசிரியர் ஜக்தீப் சோக்கர் புகார் கடிதத்தை ஆதரித்த 93 ஓய்வுபெற்ற குடிமைப்பணி அதிகாரிகள், மோடியின் வெறுப்புப் பேச்சுக்கு  கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த பச்சையான மதவெறிப் பிரச்சாரத்துக்கு இன்னும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. மோடியின் இந்த வெறுப்பு பேச்சுக்கு எதிராக இதுவரை 2,200 புகார் மனுக்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

;