india

img

ஏழை மக்களை புறக்கணிக்கும் மோடி அரசின் தடுப்பூசிக் கொள்கை.... இடைத்தரகர்களுக்கு பணம் குவிக்க வாய்ப்பு.... ராகுல் காந்தி கடும் சாடல்....

புதுதில்லி:
மத்திய பாஜக அரசின் கொரோனா தடுப்பூசிக் கொள்கைகளால் ஏழைகள், விளிம்புநிலையில் உள்ள  மக்கள் புறக்கணிக்கப்படு வார்கள். இது பாகுபாடு கொண்ட கொள்கை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடுமையாகச் சாடியுள்ளார்.நாட்டில் கொரோனா வைரஸ்தொற்று தீவிரமாகப் பரவிவருகிறது. தனியார் மருத்துவமனை கள், மாநிலங்கள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்யலாம் என்றும்  50 சதவீதம்
தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், 50 சதவீதத்தை வெளிச்சந்தை யிலும் மருந்து நிறுவனங்கள் விற்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.மத்திய அரசின் புதிய தடுப்பூசிக்கொள்கையால், தடுப்பூசிக்கு நாடுமுழுவதும் ஒரே மாதிரியான விலைஇருக்காது. வசதி படைத்தவர்கள், பணம் படைத்தவர்கள் மட்டுமே தடுப்பூசி வாங்கி செலுத்திக் கொள்ளக்கூடிய நிலை உருவாகும்,பாகுபாட்டை அதிகரிக்கும் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிவிட்டரில்,மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கை குறித்து  விமர்சித்துள்ளார்.  அந்த பதிவில், “மத்திய அரசின்புதிய தடுப்பூசிக் கொள்கை யால் 18 வயது முதல் 45  வய துள்ளவர்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி கிடைக்காது. இடைத்தரகர்கள் தடுப்பூசிகளை வாங்கி வைத்துக்கொண்டு விருப்பம் போல் விலை வைத்து விற்பார்கள்.குறிப்பாக விளிம்புநிலை சமூகத்தில் உள்ள மக்களுக்குத் தடுப்பூசி கிடைக்க எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. இந்திய அரசின் தடுப்பூசித் திட்டம் பாகுபாடு உடையது, எந்தவிதமான பகிர்மானக் கொள்கையும் இல்லை, திட்டமிடலும் இல்லை.இந்தியா ஆக்சிஜன் இல்லாமல் மூச்சுத் திணறுகிறது. சுயதிருப்தி கொள்ளும் இந்திய அரசுக்கும், அதன் திறமையின்மைக்கும் நன்றி” என்று சாடியுள்ளார்.

;