india

img

விவசாயிகள் போராட்டத்தால் ரூ.815 கோடி சுங்க வரி இழப்பாம்... மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ‘கவலை’

புதுதில்லி:
தில்லியில் கடந்த 118 நாட்களாக தொடரும் விவசாயிகள் போராட்டத்தால் 3 மாநிலங்களில் ரூ. 815 கோடி சுங்கக் கட்டணவசூலில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரிகவலைப்பட்டுள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 நாசகர வேளாண் சட்டங்களை எதிர்த்து,நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தில்லி எல்லைகளை முற்றுகையிட்டு, குறிப்பாக, ஹரியானா, உபி,பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச்சேர்ந்த விவசாயிகள், தில்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காஸிப்பூர் ஆகியவற்றை முற்றுகையிட்டு 118 நாட்களாக, வெயில், மழை, குளிர் எதையும் பொருட்படுத்தாமல் போராடிக் கொண்டிருக்கின்றனர். மேலும், போராட்டக்களத்திலேயே 200-க்கும் மேற்பட்டவிவசாயிகள் உயிரை விட்டுள்ளனர்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளை ஒருமுறை கூட நேரில் சந்தித்துப் பேசத் தயாரில்லை. இதனால் போராட்டம் தொடர்ந்து கொண் டிருக்கிறது.மாறாக, மோடி அமைச்சரவையில் மிக முக்கிய அமைச்சராக இருக்கும் நிதின் கட்காரி,தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் காரணமாக மூன்று மாநிலங்களில் ரூ.815 கோடி சுங்கக் கட்டண இழப்புஏற்பட்டுள்ளதாக ‘கண்ணீர்’ விட்டுள்ளார். “இந்த இழப்பு பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதில் பஞ்சாபில் ரூ. 487 கோடி, ஹரியானாவில் ரூ. 328 கோடி மற்றும்ராஜஸ்தானில் ரூ. 1.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

;