india

img

85 வயது தாயாரை தாக்கிவிட்டு பழியை எதிர்க்கட்சிகள் மீது போட்ட பாஜக நிர்வாகி.... பேரனின் வாக்குமூலத்தால் அம்பலத்திற்கு வந்த நாடகம்....

கொல்கத்தா:
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக எனமூன்று அணிகள் களத்தில் இருந்தாலும், எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று பல்வேறு, திருட்டுத்தனங்களை, தில்லு முல்லு வேலைகளை பாஜகசெய்து வருகிறது.அந்த வகையில்தான், மேற்குவங்கத்தின் வடக்கு பர்கானா மாவட்டத்தில், கடந்த சனிக்கிழமையன்று தன்னையும் தனது 85 வயது தாயாரான ஷோவா மஜூம்தாரையும் அடையாளம் தெரியாத எதிர்க் கட்சிக்காரர்கள் தாக்கி விட்டதாக கோபால் மஜூம்தார் என்ற பாஜகநிர்வாகி பரபரப்பை ஏற்படுத்தினார். முகமூடி அணிந்த மூன்று நபர்கள் திடீரென்று வீட்டிற்குள் நுழைந்து தாக்குதலை நடத்தியதாக, தாயாரை விட்டே பேட்டியும் அளிக்க வைத்தார். தாயார் ஷோவா மஜூம்தாரும், “எனது மகன் பாஜக நிர்வாகியாக இருப்பதால் தாக்கப்பட்டுள்ளார். இரண்டு நபர்கள் என்னையும் தாக்கினர். என் மகனின் தலை மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனது உடல்நிலையும் சரியில்லை. இந்தத் தாக்குதல் காரணமாக என்னால் சரியாகப்பேசவோ உட்காரவோ முடியவில்லை. நான் படுக்கையிலிருந்தபோதே தாக்கப்பட்டேன்” என்று கூறினார். இதை வைத்து, தங்கள் கட்சிநிர்வாகிகளுக்கு மேற்கு வங் கத்தில் பாதுகாப்பில்லை என்று மிகப்பெரிய பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு பாஜகவினர் அனுதாபம் தேடினர்.

இந்நிலையில், 85 வயது மூதாட்டி ஷோவா மஜூம்தாரை தாக்கியதே அவரது மகனும் பாஜகநிர்வாகியுமான கோபால் மஜூம்தார்தான் என்பது அம்பலமாகி இருக்கிறது. எனது பாட்டியை, கோபால் மஜூம்தார்தான் பல மாதங்களாக அடித்து சித்ரவதை செய்து வருகிறார் என்று ஷோவாமஜூம்தாரின் பேரன் கோபிண்டோதெரிவித்துள்ளார். இந்த வன் முறை நாடகத்திற்குப் பின்னால் பாஜக இருக்கலாம் என்றும் அவர்சந்தேகம் தெரிவித்தார். மேலும், மகன் தன்னை அடித்துத் துன்புறுத்துவது குறித்து,ஷோவா மஜூதார் ஒவ்வொரு நாளும் தங்கள் வீட்டிற்கு வந்துபுலம்புவார் என கோபிண்டோவின் மனைவியான பிரமிதா மஜூம்தாரும் தெரிவித்துள்ளார்.

;