india

பெட்ரோல், டீசல் கொள்ளை விலைக்கு எதிராக கேரளத்தில் இன்று வரலாறு படைக்கும் போராட்டம்....

திருவனந்தபுரம்:
ஒன்றிய அரசின் எரிபொருள்  கொள்ளை விலைக்கு எதிராக எல்டிஎப் தலைமையில் புதனன்று நடைபெறும் இயக்கம் வரலாற்று சாதனையாக அமையும் என எல்டிஎப் ஒருங்கிணைப்பாளர் ஏ.விஜயராகவன் கூறினார்.

இப்போராட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில பொறுப்பு செயலாளர் ஏ.விஜயராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது: கேரளத்தில் 5 லட்சம் மையங்களில் 20 லட்சம் மக்கள் பங்கேற்று வரலாற்றுச் சாதனை படைப்பார்கள். கோவிட் விதிமுறைகளுக்கு இணங்க வார்டு அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் புதனன்று (ஜுன் 30) மாலை 4 மணிக்கு இப்போராட்டம் நடைபெறும்.கோவிட் ஏற்படுத்தியுள்ள துயரங்களால் மக்கள் அவதிப்படுகையில் எரிபொருள் விலை எந்தவித இடையூறும் இல்லாமல் அன்றாடம் அதிகரித்து வருகிறது. எண்ணெய்நிறுவனங்கள் மக்களுக்கு இழைக்கும் துரோகத்துக்கு துணை போவதன் மூலம் மோடி அரசும் பாஜகவும் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான ரூபாயை கொள்ளையடிக் கின்றன. இதன் பிரதிபலனாக, தனியார் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பாஜகவின் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் செல்கிறது. பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து பகல் கொள்ளையடிக்கிறார்கள். இதற்கு எதிரான கேரளத்தின் உணர்வு நாட்டின் மிகப்பெரிய மக்கள் எதிர்ப்பாக சுடர்விடும் என்று ஏ.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

;