games

img

ஐபிஎல் 2024

விராட் கோலியின் “நோ பால்” விவகாரம் விதிகளுக்கு உட்பட்டது

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 36-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றி இலக்கான 223 ரன்களை துரத்திய பெங்களூரு அணி, 221 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கொல்கத்தா அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பெங்களூரு தொடக்க வீரரான இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி 7 பந்துகளில் 18 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த பொழுது, கொல்கத்தா வீரர் ஹர்ஷித் ராணாவின் டாஸ்  வகையிலான பந்துவீச்சில் “இடுப்பு நோ பால்” சர்ச்சை யுடன் ஆட்டமிழந்தார்.

களநடுவரும், மூன்றாம் நடுவரும் விராட் கோலி ஆட்டமிழந்ததாக அறிவித்தனர். இதற்கு விராட் கோலி கடும் எதிர்ப்பு தெரிவித்து நடுவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும் கோபத்தில் பெவிலிய னுக்குச் செல்லும் பொழுது குப்பை தொட்டியை அடித்து  நொறுக்கினார். இதுபோக கொல்கத்தா ஈடன் கார்டன்  மைதானத்தில் குழுமியிருந்த பெங்களூரு ரசிகர்கள் நடுவர் களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோஷமிட்டனர். தற்போது போட்டி முடிந்து 3 நாட்களை கடந்து விட்ட நிலையில், விராட் கோலியின் “நோ பால்” விவகாரம் இன்னும் விவாத பொருளாகவே உள்ளது.

விராட் கோலியின் மீது தவறு
தரையில் இருந்து விராட் கோலியின் இடுப்பு அளவு உயரம் 1.04 மீட்டர் என்ற நிலையில், ஹர்ஷித் ராணா வீசிய டாஸ் வகையிலான பந்துவீச்சு 0.92 மீட்டர் உயரத்தில்தான் கீழ் நோக்கி இறங்கியது. மிக முக்கிய மாக டாஸ் பந்தை விராட் கோலி கிரீஸிலிருந்து இரண்டு  அடி முன்கூட்டியே பந்தை எதிர்கொண்டார். கிரீஸில் இருந்தால் மட்டுமே “இடுப்பு அளவு நோ பால்”  கணக்கில் கொள்ளப்படும் என்ற நிலையில், விராட் கோலி முன்கூட்டியே பந்தை எதிர்கொண்டதால் “இடுப்பு  அளவு நோ பால்” கோரிக்கை வைப்பதே தவறானதாகும். 

மேலும் விராட் கோலி கிரீஸில் இருந்தாலும் டாஸ்  பந்துவீச்சு 0.92 மீட்டர் அளவிலேயே எகிறும் என மூன்றாம் நடுவரின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். இதனால் விதிகளுக்கு உட்பட்டு ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சு நோ பாலாக கருத முடி யாது. நடுவரின் முடிவு நியாயமானதுதான். இதனை சர்ச்சை  பொருளாக இன்றளவும் அரட்டை அடித்து வருகிறது கிரிக்கெட் உலகம்.

இன்றைய ஆட்டம்

ஹைதராபாத் - பெங்களூரு
(ஆட்டம் - 41)
இடம் : ராஜிவ் காந்தி மைதானம், ஹைதராபாத், தெலுங்கானா
நேரம் : இரவு 7:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா (இலவசம்)

“இடுப்பு நோ பால்”

தரையில் எழும்பும் பந்துகளை விட, தரையில் எழும்பாமல் நேராக பேட்டர்களை நோக்கி வரும் டாஸ் வகையிலான பந்துவீச்சு சற்று அபாயகரமானது. இந்த வகை பந்துகள் பேட்டர்களின் கண்ணில் சரியாக புலப்படாமல் அசுர வேகத்தில் துப்பாக்கி தோட்டா போன்று சீறி வரும். டாஸ் பந்துவீச்சில் இடுப்புக்கு கீழே வரும் பந்துகளை கூட சரியாக கணிக்கலாம். ஆனால் நெஞ்சிற்கு மேலான உயரத்தில் வரும் பந்துகளை கணிப்பது கடினம் என்பதால், இந்த வகையான பந்துவீச்சுகள் பேட்டர்களுக்கு உயிருக்கே  உலை வைக்கும் அளவிற்கு காயத்தை ஏற்படுத்தும். இதனால் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) இடுப்புக்கு மேலே வீசப்படும் டாஸ் பந்துவீச்சை நோ பாலாகவும், ஒரு வீரர் ஒரு போட்டியில் இடுப்புக்கு மேலே இரண்டு டாஸ் பந்துகளை வீசினால் அவரை போட்டியில் இருந்து மேற்கொண்டு பந்துவீச முடியாத தகுதி நீக்க விதிமுறையை கொண்டு வந்தது. இதன் அடிப்படையில்தான் விராட் கோலி “நோ பால்” கேட்டார். ஆனால் பந்து அடி வயிற்றுப் பகுதியை விட்டு மேலே எகிறவில்லை என்பதால் நடுவர்கள் “நோ பால்” கொடுக்கவில்லை.

;