districts

கல்குவாரி வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் பலி! விசாரணை நடத்தி, உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

விருதுநகர், மே 2 - கல்குவாரி வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தவும், இந்த விபத்தில் பலியான 4 தொழிலாளர்களின் குடும்பங் களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நட வடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டி ருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளதும், பலர் படுகாயமுற்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் வேதனையளிக்கிறது. உயிரி ழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

குவாரியில் உள்ள குடோனில் வெடி  மருந்துகளை இறக்கிய போது இந்த  விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தி னால் அருகில் உள்ள சுமார் 20 கி.மீ. தூரம் வரை அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் சேத மடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இத னால் இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் உயிருக்கு பயந்து பெரும் அச்சத் தில் உள்ளனர். இந்த கல்குவாரியை உட னடியாக மூட வேண்டும் என்று வலி யுறுத்தி வருகின்றனர்.

எனவே, இந்த விபத்து குறித்து உரிய முறையில் விசாரணை செய்து சட்டப்படி யான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங் களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறு பவர்களுக்கு உயரிய தரமான சிகிச்சை  அளிக்கவும், இப்பகுதி மக்களின் கோரிக் கையை ஏற்று இந்த கல்குவாரியை உடன டியாக மூடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேலும், இதுபோன்று அசம்பாவித சம்ப வங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்ப தற்கு தமிழகம் முழுவதும் உள்ள கல்குவா ரிகளை உரிய முறையில் கண்காணிக்க வும், உரிமம் இல்லாமலும், விதிமுறை களை மீறும் குவாரிகளை உடனடியாக இழுத்து மூடுவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

;