districts

img

கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. மக்கள் சந்திப்பு இயக்கம்

மதுரை, ஜூன் 1- மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா  கொட்டாம்பட்டி பகுதியில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஜூன் 1 புதனன்று மக்கள் சந்திப்பு இயக்  கத்தை நடத்தி திட்டப் பணிகள் ஆய்வு  செய்தார். கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்  பள்ளபட்டியில் ஊராட்சியில் துவங்கி  சூரப்பட்டி, பொட்டப்பட்டி, தொந்தி லிங்கபுரம், சொக்கம்பட்டி, வலைச்சேரி பட்டி, கம்பூர் அய்யாபட்டி ஆகிய பகுதி களில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடை பெற்றது. இந்த ஊராட்சி மக்கள் சந்திப்பு கூட்டத்தின் போது சாலை வசதி, குடிநீர்  மேல்நிலைத் தொட்டி, கழிப்பறை வசதி,  100நாள் வேலையில் பள்ளி சுற்றுச்சுவர் கட்டிடம், மயான காம்பவுண்ட் சுவர், பேருந்து நிறுத்த நிழற்குடை கோரி பல்  வேறு மனுக்கள் பொதுமக்கள் அளித்த னர். உடனடியாக தீர்க்க முடிந்த பிரச்ச னைகளுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., உடனடியாக தீர்வு கண்டார். நன்றி கூறிய மாற்றுத்திறனாளி 100 நாள் வேலை பார்க்கு தொழிலா ளர்களிடம் 100 நாள் வேலை தருவதாக  உத்தரவாதம் அளித்தார். சொக்கம்பட்டி யில் சிங்கராஜா எனும் மாற்றுத்திற னாளி, சு.வெங்கடேன் எம்.பி.க்கு சால்வை அணிவித்து உங்கள் முயற்சி யில் வாங்கிக்கொடுத்த 3 சக்கர வாக னத்தை பயன்படுத்தி வருகிறேன் என்று  கூறி நன்றி தெரிவித்தார்.  வலைச்சேரிபட்டியில் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட சமுதாய கூடத்தில் அரசு பயன்பாட்டிற்காக சிமண்ட் மூடை போன்றவை அடுக்கி வைத்திருப்பதாக கூறி புகார் அளித்த னர்.

உடனடியாக இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தலையிட்டு பேசி  இரண்டு நாட்களுக்குள் அதனை அகற்றி  வேறு இடத்திற்கு மாற்றி விட்டு தக வல் தெரிவிக்க வேண்டும் என்று எம்.பி. கூறினார்.  இதே வலைசேரிபட்டியில் பேருந்து நிறுத்த நிழற்குடை கேட்டு மனு அளித்த னர். விரைவில் நாடாளுமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏற்பாடு செய்வதாக கூறினார். கம்பூரில் மெகராஜூ பேகம் என்ற  பெண் உதவி கேட்டு மனு அளித்தார். உட னடியாக மாற்றுத்திறனாளிக்கு தேவை யான நிதி 1500 ஐ ஒருவாரத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் அதனை தகவல் தெரிவிக்க வேண்டுமெனவும் அதிகாரிகளிடம் கூறினார். தொடர்ந்து அந்த பெண்ணிற்கு மாற்றுதிறனாளி வாகனம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் வழங்கு வதாக உறுதியளித்தார். முன்னதாக தொந்தலிங்கபுரம் ஊராட்சியில் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் அதனை அகற்றுமாறு மனு அளித்தனர். மனு பெற்றுக் கொண்ட பின் உடனடி யாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். சொக்கம்பட்டியில் சரியான முறை யில் பேருந்து வரவில்லை என்று கூறி னார். அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து பல ஊராட்சிகளில் மரக்கன்று நட்டு பொது மக்களிடையே உரையாற்றினார்.

கல்வி கடன் குறித்து மக்களிடையே எடுத்து கூறினார். மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு 119 கோடி கல்வி கடன் வாங்கி கொடுத்துள்ளோம். பணம்  கட்ட முடியாமல் கல்வி பயில முடியா மல் மதுரை மாவட்டத்தில் யாரும் இருக்கக் கூடாது என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றார். இந்த சுற்று பயண நிகழ்வில் உதவி திட்ட அலுவலர் எம்.காந்திராஜா, வட்  டார வளர்ச்சி அலுவலர் ஒன்றிய உதவி பொறியாளர்கள், விஏஒ, மற்றும் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ்.பாலா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கார்த்திக், தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர், எம்.கண் ணன், தாலுகா குழு உறுப்பினர்கள் வி.அடக்கிவீரணன்,ஏ.ராஜேஸ்வரன், கே.ஆனந்த சி.அடைக்கன் மற்றும் கிளை தோழர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் போது மற்றொரு நிகழ்வாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தென்னை கன்று, விசை தெளிப்பான், கைத்தெளிப்பான், தென் னைமரம் ஏறும் கருவி ஆகியவற்றை வழங்கி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

;