districts

img

கடந்த 3 ஆண்டில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் 80% வீழ்ச்சி இளையோர் நாடாளுமன்ற நிகழ்வில் சு.வெங்கடேசன் எம்.பி., வேதனை

மதுரை, பிப்.24-  கடந்த மூன்று ஆண்டுகளில் சரா சரியாக நாடாளுமன்றம் 60 முதல் 70 நாட்கள் மட்டுமே நடந்துள்ளது. கிட்டத்தட்ட  80 சதவீதம் குறைந்துள் ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினார்.  மதுரை மாவட்ட நேரு யுவகேந் திரா சார்பில் மாவட்ட அளவில் இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வெள்ளி யன்று நடைபெற்றது. இந்நிகழ்வைத் துவக்கி வைத்து சு.வெங்கடேசன் எம்.பி., பேசியதாவது:- 1970-80-ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றும் போது அதிலுள்ள சாதக- பாதகங்கள் குறித்து நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றுள்ளது.  இன்றைக்கு அது கிடையாது. விவா தமின்றி  நாடாளுமன்றத்தில் இயற் றப்படும் சட்டங்களுக்காக ஏராள மான வழக்குகளை நீதிமன்றங்கள் சந்திக்கின்றன. தற்போது நடைபெற்ற பட்ஜெட்  கூட்டத்தொடர் வெறும் 14 நாட்களே நடைபெற்றது. அப்போது ஒரே ஒரு நிமிடம் மட்டும் எனக்கு ஒதுக்கப் பட்டது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பேசும் ஒரு நிமிடப் பேச்சும் 140 கோடி மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். தற்போது நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் தன்மை, நேரம் மற்றும் நடைபெறும் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. முது பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் களில் ஒருவரான சோம்நாத் சாட்டர்ஜி சபாநாயகராக இருந்த போது, நாடாளுமன்றம் ஆண்டிற்கு 120 நாட்கள் முதல் 135 நாட்கள் வரை நடந்துள்ளது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக நாடாளுமன்றம் 60 முதல் 70 நாட்கள் மட்டுமே நடந்துள்ளது. நாடாளுமன்றம் நடக்கும் நாட்கள் குறைந்தால் விவாத நாட்க ளும் குறையும். ஒரு சட்டத்தை  நாடாளுமன்றத்தில் நிறைவேற்று கிறார்கள் என்றால் அதை விவா திப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு மூன்றில் ஒரு பங்கு நேரம் தான் கிடைக்கும்.

எதிர்க்கட்சிகள் தான் அந்தச் சட்டத்திலுள்ள சாதக-பாத கங்களைக் கூற முடியும்.  ஆளுங்கட்சி அந்தச் சட்டத்தை  சரி என்று தான் வாதிடும். மாண வர்கள் நம்முடைய நாடாளுமன்ற விவாதத்தை மட்டுமல்ல; மற்ற நாடு களில் நடைபெறும் நாடாளு மன்ற விவாதங்களையும் கவனிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார். கல்விக் கடன் எப்படி சாத்தியமானது? தொடர்ந்து பேசிய அவர், “கல்விக் கடன் வழங்குவதில் மகா ராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக மும்பையில் அதிக அளவு கல்விக் கடன் கொடுக்கப் படுகிறது அங்கு கடன் கொடுக்கும் வங்கிகள் தான் நம்முடைய மாநி லத்திலும் உள்ளன. மும்பையில் கொடுப்பது போல் கல்விக்கடன் மதுரைக்கு ஏன் கொடுக்கக் கூடாது என்பதை ஒரு கேள்வியாக எழுப்பி னேன். அதன் தொடர்ச்சியாக மதுரையில் இரண்டு ஆண்டுகளாக கல்விக்கடன் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு ரூ.118.80 கோடி  மதுரை மாவட்டத்திற்கு கொடுக் கப்பட்டுள்ளது. இந்தாண்டு அதைவிட அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள்  கல்விக் கடனுக்கு வங்கியில் விண் ணப்பித்துக் கிடைக்கவில்லை என்றால் மக்களவை உறுப்பினர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து தரப்படும். இது போன்ற மக்கள் பணிக ளை களத்தில் செய்து விட்டு நாடாளுமன்றத்தில்  குறைந்த பட்சம் கல்விக் கடனுக்கான வட்டி யையாவது ஒன்றிய அரசு குறைக்க வேண்டுமென வலியுறுத்து கிறோம். பெரும் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களுக் கான வட்டியை தள்ளுபடி செய்கி றார்கள். அல்லது வராக்கடனாக அறிவிக்கிறார்கள். ஏன் மாணவர் களுக்கான கல்வி கடன் வட்டியை மட்டும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்? இது குறித்தும் மாணவர்கள் சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.  தமிழ்நாடு-பாண்டிச்சேரி நேரு யுவகேந்திரா அமைப்பின் மாநில இயக்குநர் எஸ்.செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சக்திவேல், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முதல்வர் கவிதா  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;