districts

img

தேனி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்திடுக! தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு வலியுறுத்தல்

தேனி, ஜூன் 24- தேனி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங் களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தேனி மாவட்ட மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் தேனி மாவட்ட 4 வது மாநாடு தேனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி.மோகன் தலைமை வகித்தார். வர வேற்புக்குழு செயலாளர் எம்.செல்வம் வரவேற்றுப் பேசினார். அஞ்சலி தீர்மானத்தை எஸ்.கனகராஜ் வாசித்தார். மாநாட்டை சங்கத்தின் மாநில செயலாளர் பாலசுப்பிரமணி துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் இ.தர்மர் வேலையறிக்கையும், மாவட்ட பொருளாளர் வரவு -செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, சிபிஐ மாவட்ட செயலாளர் கே.பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சோ.சுருளி ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் சுரேஷ், தமிழ்புலிகள் கட்சி நிர்வாகி தமிழரசி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சு.வெண்மணி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சி.முனீஸ்வரன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.வேல்பிரகாஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தும் ,மாநாட்டினை நிறைவு செய்தும் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு உரையாற்றினார் .மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் டி.ராஜா நன்றி கூறினார்.
புதிய நிர்வாகிகள் 
மாநாட்டில் மாவட்டத் தலைவராக டி.கே.சீனிவாசன், செயலாளராக இ.தர்மர், பொருளாளராக பி.கோபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக எம்.செல்வம், எஸ்.பொம்மையன், எஸ்.வெண்மணி, வீ.மோகன், துணைச் செயலாளர்களாக எஸ்.கனகராஜ், மதன்குமார், டி.ஜெயபாண்டி, கே.செல்வராஜ் உள்ளிட்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.
தீர்மானம் 
சாதி ஆணவ படுகொலையை தடுத்திட தனி சட்டம் நிறைவேற்ற வேண்டும். தேனி மாவட்டத்தில் சாதிய பாகுபாடு, தீண்டாமை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;