districts

img

வெப்ப அலையால் வேலை இழந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் தருக!

திருப்பூர், மே 7- வெப்ப அலை காரணமாக வேலை செய்ய இயலாமல் பாதிக்  கப்படும் தொழிலாளர்கள் மற்றும் வெப்ப அலை காரணமாக வேலை  இழந்த தொழிலாளர்களுக்கு நிவா ரணம் வழங்க கட்டுமானத் தொழி லாளர் சம்மேளனம் (சிஐடியு) வலி யுறுத்தி உள்ளது.

கட்டுமான தொழிலாளர் சம்  மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு அரசு  கட்டுமான நலவாரிய உறுப்பினரு மான டி.குமார் செவ்வாயன்று வெளி யிட்டுள்ள செய்தி அறிக்கை வருமாறு:

2023 டிசம்பரில், கட்டுமானம் மற்றும் உடல் உழைப்புத் தொழி லாளர்களுக்கான நல வாரிய ஆன்  லைன் சர்வரில் பழுது ஏற்பட்டு அதில் பதிவு செய்திருந்த 74 லட்  சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் களின் தரவுகள் அழிந்து விட்டதாக  நலவாரியம் கூறியது. அதன்பிறகு 6 மாதமாகியும் சரி செய்யாமல் தற்போது வரை மெத்தனப் போக்கு டனேயே நடந்து வருகிறது. 

 கல்வி உதவி, திருமண உதவி,  இயற்கை மரணம், விபத்து மரணம், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட திட்  டங்களில் பணப்பயன் கோரி விண் ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன்  சர்வரைக் காரணம் காட்டி இது நாள் வரை பணப் பயன்கள் வழங்காமல்  இழுத்தடிக்கும் போக்குடன் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. 

கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் மற்றும் சம்பந்  தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்  கும் கடிதம் மூலமும், நேரடியாக வும் தகவல் தெரிவித்தும் ஆன்  லைன் சர்வரை சரி செய்யாமல் பய னற்ற பதில்களை கூறி வருகின்ற னர். தமிழக அரசுக்கு தகவல் தெரி வித்தும் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் அதன் மீது எந்த வித மான நடவடிக்கையும் எடுப்பது போல் தெரியவில்லை. 

மேலும் 36, 37-ஆவது நலவாரி யக் கூட்ட முடிவுகளின் அடிப்படை யில் ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரமாக உயர்த்தப்பட வேண்டும், பெண் தொழிலாளிக்கு 55 வயதில் ஓய்வூ தியம் வழங்க வேண்டும், 60 வயது பூர்த்தியடைந்த நாளிலிருந்து விண்ணப்பித்த தொழிலாளிக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலதாமதம் ஏற்படும் பட்சத்தில்  அதனை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்பன உள்  ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அரசின் கவனத்திற்கு எடுத்  துச் செல்லப்பட்டும், அதன் மீது எந்த விதமான நடவடிக்கையும் இல்லாத போக்கே தொடர்கிறது. 

தில்லி, கர்நாடகா போன்ற மாநி லங்களில் கட்டுமானம் மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கு வதுடன், பாலர் கல்வி முதலே கல்வி  உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவித் தொகை வழங்க  வேண்டும் என சிஐடியு தொடர்ச்சி யாக கோரிக்கை வைத்து வரு கிறது. திருமண உதவித்தொகை யை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த  வேண்டும் என்ற கோரிக்கையோடு வீடு கட்டும் திட்டத்தில் பதிவு செய்த  தொழிலாளர்களுக்கு குறைந்தபட் சம் மாதம் 1000 பேருக்காவது பணப்  பயன்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ச்சி யாக முன் நிறுத்தி வருகிறது. ஆனால்  திருமண உதவித் தொகையில் பல்  வேறு காரணங்களை கூறுகின்ற நல வாரியம், அதற்கான பணப்பயன் களை வழங்குவதில் மெத்தனப் போக்குடனே நடந்து வருகிறது. 

ஒரு சில மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் தொழிலாளர் களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு பண பயன்கள் வழங்கி, தொழி லாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்  தில் பணம் வழங்கி விட்டோம் என்ற விளம்பரத்தை மட்டுமே நல  வாரியம் முன்னெடுத்து வருகிறது.  பதிவு செய்த பல்லாயிரக்கணக் கான கட்டுமான தொழிலாளர்கள் இதுவரை காத்திருக்கும் நிலையே  தொடர்ந்து வருகிறது. 

இந்த ஆண்டு வெப்ப அலை அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில் சமீபத்தில் ஒரு தொழிலாளி இதில்  உயிரிழந்து விட்டார். 

எனவே தமிழக அரசும் நல வாரி யமும் உடனடியாக இதில் கவ னம் செலுத்துவதுடன் வெப்ப  அலை காரணமாக ஏற்படும் உயிரி ழப்பைத் தடுக்கும் வகையில், வேலைக்கு செல்ல இயலாத தொழி லாளர்களுக்கும், வேலை இழந்த  தொழிலாளர்களுக்கும் நலவாரி யம் ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகை  வழங்க வேண்டும். 

பல்வேறு யூகங்களின் அடிப் படையிலும் வாய்மொழிப் பேச்சுக்  களின் அடிப்படையிலும் ஆன் லைன் சர்வர் சம்பந்தமாக தொழி லாளர்களிடம் ஒரு பய உணர்வு ஏற்பட்டுள்ளது. 

எனவே, சம்பந்தப்பட்ட துறை  அமைச்சரும், தமிழக அரசும் இதன்  மீது உடனடி கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் சர்வர்,  ஆன்லைன் பிரச்சனையை தீர்ப்பது டன், நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள மாத ஓய்வூதியமாக ரூ.3  ஆயிரம், திருமண உதவித்தொகை யாக ரூ. 50 ஆயிரம், ஒன்றாம் வகுப்பு  முதல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்; வீடு கட்டும் திட்டத்தைக் கிடப்பில் போடுவதை தவிர்த்து உடனடியாக பணப் பயன்களை வழங்க வேண்டும்; ஓய்வூதியம் பெறும் தொழிலாளி இறக்க நேரிட்டால் அவரது குடும்  பத்திற்கு இயற்கை மரண ஈமச் சடங்கு உதவி நிதி வழங்குவது, பெண் தொழிலாளிக்கு 55 வயதில்  ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட  திட்டங்களை உடனடியாக நிறை வேற்ற வேண்டும்; ஆன்லைன் சர் வர் பிரச்சனை காரணமாக கல்வி உதவி, புதுப்பித்தல், ஆயுள் சான்று பதிவு செய்ய இயலாமல் உள்ள தொழிலாளர்களுக்கு பதிவு  செய்வதற்கான காலத்தை கூடு தலாக 6 மாதத்திற்கு நீட்டிப்பு செய்து தர வேண்டும். இவ்வாறு டி. குமார் கூறியுள்ளார்.

;