districts

திருச்சி முக்கிய செய்திகள்

இன்று நீட் தேர்வு அரியலூரில் 2364  மாணவர்கள் எழுதுகின்றனர்

அரியலூர், மே 4- அரியலூர் மாவட்டத் தில் மே 5 (ஞாயிறு) அன்று 2364 மாண வர்கள் நீட் தேர்வு எழுது கின்றனர். மருத்துவ படிப்பிற் கான நீட் தேர்வு மே 5 அன்று நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் மாண வர்கள் தேர்வு எழுது கின்றனர்.  அரியலூர் ராஜாஜி  நகரில் உள்ள மான் போர்ட் மெட்ரிகுலேசன் பள்ளியில் 648 மாணவர் களும், வெங்கட கிருஷ் ணாபுரத்தில் உள்ள ஸ்ரீ  ராமகிருஷ்ணா பொதுப்  பள்ளியில் 552 மாண வர்களும், தாமரைக் குளம் ராம்கோ வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 432 மாணவர் களும், ரெட்டிப்பாளை யம் ஆதித்ய பிர்லா பொதுப்பள்ளியில் 108  மாணவர்களும், கருப்பூர் விநாயகா பொது பள்ளி யில் 624 மாணவர்களும் என மொத்தம் 2364 மாண வர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர்.  இத்தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை மற்றும் காவல் துறையி னர் இணைந்து செய்து  வருகின்றனர். அரசு போக்குவரத்து துறை  சார்பில் அரியலூர் அண்ணா சிலையில் இருந்து சிறப்பு பேருந் துகள் இயக்கப்படு கின்றன. தேர்வு எழுதும்  மையங்களில் மாண வர்களுக்கு தேவையான குடிநீர், மின்சார வசதி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான வசதி களும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

நல்லாடையில் மே தின கூட்டம்

மயிலாடுதுறை,  மே 4 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேதின தெரு முனைக் கூட்டம் கிளை செயலாளர் அழகிரிசாமி தலைமையில் நடை பெற்றது.  பொன்.முத்துராம லிங்கம் நினைவை யொட்டி நடைபெற்ற கூட்டத்திற்கு  பாலகிரு ஷ்ணன், செல்வம், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், மாவட் டக் குழு உறுப்பினர்கள் காபிரியேல், ராணி, ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் குணசேகர், அய்யப்பன், சந்திரமோகன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலா ளர் பவுல் சத்தியராஜ், சிஐடியு உதயக்குமார் ஆகியோர் உரையாற்றி னர்.

பாராட்டு விழா

பாபநாசம், மே 4 - தமிழ்நாடு வருவாய்த்  துறை கிராம உதவி யாளர் சங்கம் சார்பில்,  பணி நிறைவு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.  கிராம உதவியாளர் களாக இருந்து பணி  நிறைவு பெற்ற கோபு,  உமாராணி ஆகியோருக் கான பாராட்டு விழா தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடை பெற்றது. இதில் சங்கத் தின் மாநிலச் செயலர் கார்த்திக், பாபநாசம் தாசில்தார் மணிகண்டன், துணை தாசில்தார்கள் பிரியா, அன்புக்கரசி, வட்ட நில அளவையர் கிருஷ்ணமூர்த்தி, வரத ராஜன், கிராம உதவி யாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மயானத்திற்குச் செல்ல  சுரங்கப் பாதை அமைத்துத் தருக!

கோட்டாட்சியரிடம் மனு அரியலூர், மே 4 - வேம்புகுடி மக்களுக்கு மயானத்திற்கு செல்ல சுரங்கப் பாதை அமைத்து தரக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வேம்புகுடி கிராமத்தில் உள்ள தென்னவன்நல்லூர் பகுதியில் திண்டிவனம் - கும்பகோணம் பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மயான பாதை அடைக்கப்பட்டது.  இதனால் அக்கிராம மக்கள் பாதை அமைத்துத் தரக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அப்போது அதிகாரிகள் பாதை அமைத்து தர முடியாது என கூறியதால், போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். மேலும் மயானத்திற்கு பாதை அமைத்து தர வலியுறுத்தி உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோட்டாட்சியர் ஷீஜாவிடம் மனு அளித்தனர். இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா தலைமையில், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் கிராம மக்கள் பயன்படுத்தும் மயானத்திற்குச் செல்வதற்கும், கோயில் விசேஷங்களுக்கு செல்வதற்குமான பாதை குறுகலாக அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதையடுத்து, பாதையை அகலப்படுத்தி சுரங்கப் பாதை அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது.

தண்ணீர் பந்தல் திறப்பு

பாபநாசம், மே 4 - திமுக சார்பில் கோடைக் கால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசத்தில் கோடைக் கால  தண்ணீர் பந்தலை மாவட்ட  ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச்செல்வன் திறந்து வைத்தார். பாபநா சம் ஒன்றியச் செயலர்கள், பாபநாசம் பேரூர் செயலர் கபிலன், சுற்றுச்சூழல் அணி நிர்வாகி கார்த்தி, பேரூ ராட்சிக் கவுன்சிலர் பிரகாஷ்,  கலை, இலக்கிய அணி நிர்வாகி முபாரக் ஹீசைன், மருத்துவ அணி நிர்வாகி நவநீத கிருஷ்ணன், இளை ஞரணி நிர்வாகி மணி கண்டன் உட்பட பலர் பங் கேற்றனர்.

கும்பகோணம் நீதிமன்றத்தில் பார்க்கிங் வசதி செய்து தர வழக்கறிஞர்கள் கோரிக்கை

கும்பகோணம், மே 4- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதி மன்றத்திற்கு வருகை தந்த உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் ஆய்வுகளை மேற்கொண்டு அங்கு உள்ள வழக்கறிஞர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, “நீதிமன்றத்தில் நீதிபதிகள், வழக்கறி ஞர்கள், பொதுமக்கள், வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும். அதேபோல நீதிமன்றத் திற்கு உள்ளே உணவகம், ஜெராக்ஸ் மிஷின், ஆகியவை ஏற்படுத்தி தர வேண்டும்” என்று வழக்கறிஞர் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உடனடியாக நிறைவேற்றும் வகையில், தஞ்சை யில் உள்ள பொதுப்பணி துறை மாவட்ட செயற்பொறியாள ருக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின், மாவட்ட கூடுதல் நீதிபதி ராதிகா, தலைமை குற்றவியல் நடுவர்  சண்முகப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

50 கிலோ எடையுள்ள  அரிய வகை கடல் ஆமை மீட்பு

தஞ்சாவூர், மே 4-  சேதுபாவாசத்திரம் அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய 50 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை மீண்டும் உயிருடன் கடலுக்குள் விடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள  சின்னமனை மீனவர் கிராமத்தில் இருந்து, மகாலிங்கம் மகன்கள் சிவபாலன், ஷியாம் குமார் இருவரும் தங்க ளது படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், மீன் பிடித்து கரை திரும்பிய அவர் களது வலையில் சுமார் 50 கிலோ எடை கொண்ட அரிய வகை  கடல் ஆமை சிக்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மீன வர்கள் இருவரும் வலையிலிருந்த கடல் ஆமையை மீட்டு,  உயிருடன் கடலில் விட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை வனச்சரக அலு வலர் சந்திரசேகரன் மீனவர்கள் இருவரையும் பாராட்டி னார். மேலும், மீனவர்கள் இருவருக்கும் விரைவில் நடை பெற உள்ள பாராட்டு விழாவில் சான்றிதழ், ரொக்கப் பணம்  பரிசாக வழங்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித் துள்ளனர்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு ஒப்பந்தப் பணியில் முதலீடு செய்யச் சொல்லி ரூ.1.25 கோடி மோசடி செய்தவர் கைது

புதுக்கோட்டை, மே 4 - பொங்கல் பரிசுத் தொகுப்பு தயா ரிக்கும் ஒப்பந்தப் பணியில் முதலீடு செய்யச் சொல்லி ஆசை காட்டி ரூ.1.25 கோடி வரை மோசடி செய்தவரை புதுக்கோட்டை மாவட்டக் குற்றப் பிரிவு போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடி கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது பயாஸ். கடந்த 2022  டிச.10 அன்று இவரைத் தொடர்பு கொண்ட கும்பகோணம் சோழபுரத்தைச்  சேர்ந்த முகமது சுகைல் (32) என்பவர், தான் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் எடுத்துள்ளதாகக் கூறி அறி முகம் செய்துள்ளார். இந்தத் தொழிலில் முதலீடு செய் தால் ஒரு லட்சம் பொங்கல் பரிசுத் தொ குப்புப் பைகளுக்கு ரூ.22 லட்சம் லாபம்  கிடைக்கும் என ஆசை காட்டியுள்ளார். அதன்பிறகு, சுகைல் கொடுத்த பல்வேறு வங்கிக் கணக்குகளிலும், நேரிலும் என முதல் கட்டமாக ரூ.50 லட்சமும், அடுத்த கட்டமாக ரூ. 25 லட்ச மும் கொடுத்துள்ளார் முகமது பயாஸ்.  இடையில் அவர் கொடுத்த தொகைக் கான வட்டியாக ரூ.19 லட்சத்தை வழங்கிய சுகைல், அதிக வட்டி தருவ தாகக் கூறி அதிலிருந்தும் ரூ.10 லட்சத்தை  கூடுதல் முதலீடாகப் பெற்றுள்ளார். அதன்பிறகு ஊர் முக்கியஸ்தர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது, ரூ.5 கோடிக்கு ஏலச் சீட்டு போட்டுள்ளதாகவும், அதற்குத் தவ ணைத் தொகை செலுத்த ரூ.50 லட்சம்  கிடைத்தால், சீட்டை எடுத்து, கடன்களை  அடைத்து விடுவதாகக் கூறியுள்ளார் சுகைல். இதையும் நம்பி ரூ.50 லட்சத்தைக் கொடுத்துள்ளார் முகமது பயாஸ். அதன்பிறகு, கொடுத்த பணம் ரூ.1.35 கோடியைத் திரும்பிக் கேட்ட முகமது பயாஸூக்கு மிரட்டல் விடுத்துள்ளார் சுகைல். இந்நிலையில், 2023 மே 26  அன்று மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் முகமது பயாஸ் புகார் அளித்தார். இதனைத் தொ டர்ந்து காவல்துறையினர் விசாரித்த போது, தற்காலிகமாக ரூ.10 லட்சத்தைக்  கொடுத்துவிட்டு மீதி பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்.26  அன்று மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு புகாரை அளித்தார் முகமது பயாஸ். இந்தப் புகாரின்பேரில் மாவட்டக் குற்றப்  பிரிவு போலீசார் முகமது சுகைலை  அழைத்து விசாரணை நடத்தினர். விசா ரணையில், அவர் வாங்கிய தொகை களை ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சுகைலைக் கைது  செய்த போலீசார், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அவரை  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கார்-பைக் நேருக்கு நேர்  மோதிய விபத்தில் 2 பேர் பலி

திருவாரூர், மே 4 - திருவாரூர் அருகே அம்மையப்பன் கிராமத்தில் வேளாங்கண்ணியிலிருந்து கரூர் நோக்கி சென்ற கார்,  தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த இரு சக்கர வாகனம் ஆகியவை நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனம் தூக்கி  வீசப்பட்டு சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் வாக னங்கள் கவிழ்ந்தன. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்த காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார். அதில், காரில் வந்த கரூர் மாவட்டம் தோட்ட குறிச்சியைச் சேர்ந்த மலையப்பசாமி (44) என்பவர் காரை  ஓட்டியுள்ளார். விபத்தில் காரில் வந்த பழனியம்மாள் என்ற  மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரு  சக்கர வாகனத்தில் வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜ் (56)  தஞ்சாவூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக் காக பணியாற்றி வருகிறார். இவரும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். கொரடாச்சேரி போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரசவத்தின் போது இறந்த மருத்துவரின் இரட்டைக் குழந்தையில்  ஒரு குழந்தையும் இறந்தது

புதுக்கோட்டை, மே 4 - புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவ மனையில் பிரசவத்தின்போது மகப்பேறு மருத்துவர் உயிரிழந்த சம்பவத்தில் குழந்தை சனிக்கிழமை உயிரி ழந்தது.   புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சேவுகன் தெருவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் அஞ்சுதாவுக் கும், பெங்களூருவைச் சேர்ந்த பல் மருத்துவர் கார்த்திக்  என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.  புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவ மனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்து வந்த  அஞ்சுதா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்துக் காக அண்மையில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அறுவைச் சிகிச்சையின் போது அஞ்சுதாவுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது. பின்னர், அஞ்சுதாவுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரி ழந்தார்.  பிறந்த இரு ஆண் குழந்தைகளும் திருச்சியில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன. அதில், ஒரு  குழந்தை சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தது.

வேளாண் கல்லூரி மாணவிகள்  விவசாயிகளுடன் கலந்துரையாடல்

தஞ்சாவூர், மே 4 -  திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகள் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அத்திவெட்டி தென்னை இயற்கை வழி  வேளாண்மைக் குழு விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம், அத்தி வெட்டி கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக  வேளாண் பணி வாயிலாக இயற்கைவழி வேளாண்மை குறித்து தென்னை இயற்கைவழி வேளாண்மை குழு வின் தலைவர் மற்றும் நம்மாழ்வாரின் ‘வானகம்’ அமைப் பின்மூலம் நேரடி பயிற்சி பெற்றவர்களுமான வைரவ மூர்த்தி, செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் வடிவேல் மூர்த்தி மற்றும் நல்லசிவம், மணிமுத்து ஆகியோரிடம் கலந்துரையாடினர். பஞ்சகவ்யம், அமிர்தக் கரைசல், உப்புக் கரைசல், மீன்  அமிலம், பூச்சிவிரட்டி மற்றும் எருக்குக் கரைசல் ஆகிய வற்றின் செய்முறை, பயன்படுத்தும் முறை மற்றும் பயன்கள் குறித்துக் கேட்டறிந்தனர்.

தொழில் நசிவால் மூடப்பட்ட பஞ்சாலைகள்: மதிப்பை இழந்த ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதி!

இராஜபாளையம், மே 4- விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வத்திரா யிருப்பு, மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சேத்தூர், தேவதானம் போன்ற பகுதிகளில் ஏராளமான பருத்தி பயிரிடப்பட்டு வருவதால் இப்பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே பஞ்சா லைத் தொழில்கள் பிரபலமாகி வந்தன. ‘ஈஸ்ட் இந்தியா கார்ப்பரேஷன்’ என்ற  பெயரில் இங்கு பஞ்சாலைகள் துவக்கப்பட்டுசிறப்பாக நடைபெற்று வந்தன. “காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற பெயரில் ஒன்றிய அரசு நிறுவனமும் இங்கு துவங்கப்பட்டு ஏராளமான பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை ஆகி வந்தது.  மிக அதிகமாக காய்த்து குலுங்கும் பருத்தி ரகங்களான உகண்டா, கம்போடியா, எல் ஆர் ஏ 5166 உள்பட பல்வேறு வீரிய பருத்தி ரகங்கள் இங்கு பயிரிடப்பட்டு 50க்கும் மேற்பட்ட பருத்தி அரவைஆலைகள், ஐந்துக்கும் மேற்பட்ட பருத்தி அழுத்த ஆலைகள் ( Pressing factory), 25க்கும் மேற்பட்ட பஞ்சாலைகள், நூற்பாலைகள் ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து வந்த நிலையில் பஞ்சு மார்க்கெட் பகுதி சுறுசுறுப்பாக இயங்கி வந்தது.  அதிகாலையிலேயே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக பஞ்சு மார்க்கெட் பகுதி இருக்கும். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சுறுசுறுப்பாக இயங்கி வந்த நிலை தற்போது முற்றிலும் மாறிவிட்டது.  பருத்தி வரத்து கூடுதலாக இருந்தாலும் அதை அரைப்பதற்கு ஜின்னிங் தொழிற் சாலைகள் எண்ணி இரண்டு அல்லது மூன்று மட்டுமே உள்ளன. அவைகளை பிரஸ்ஸிங் எனப்படும் அழுத்தம் கொடுத்து அதை  பஞ்சு பேலாக மாற்றுவதற்கு இரண்டு தொழிற்சாலைகள் மட்டுமே இயங்குகின்றன.  இது தவிர நூற்பாலைகள் முக்கியமான தனியார் நிறுவனங்கள் வசம் சிறப்பாக இயங்கி வந்த நிலையில், இதர சிறிய நூற்பாலைகள் மூடப்பட்டு விட்டன. மீதி உள்ள ஒரு சில பஞ்சாலைகளும் விரை வில் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.  மொத்தத்தில் ராஜபாளையம் ‘காட்டன் சிட்டி’ என்ற பெயர் தற்போது மாறிப் போய் ராஜபாளையம் ‘டிரவுட் சிட்டி’ வறட்சியான நகராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.  ராஜபாளையத்தில் இயங்கி செய்யப்பட்டு வரும் ஆலைகளுக்கு மூலப் பொருட்க ளான பஞ்சு மற்றும் நூல் போன்றவை விலை சரித்திரம் காணாத அளவிற்கு விலை. உயர்ந்து தொழில் செய்ய முடியாத நிலைக்கு தொழில் முனைவோர் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தொழிலாளர்கள் வேறு வேலை தேடும் அவலம் தொடர்கிறது.

கல்குவாரி வெடி விபத்தில் பலியானோர்  குடும்பத்திற்கு ரூ.25லட்சம் நிவாரணம்  அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

விருதுநகர்,  மே 4- விருதுநகர் மாவட்டம், காரியாபட் டி அருகே தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி யுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், உப்பிலிகுண்டு கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த மே.1அன்று வெடி விபத்து ஏற்பட்டது.  இதில் அங்கு பணியில் இருந்த திருமால் புதுப்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி மகன்  கந்தசாமி(47), சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்த துரை(25), குரு சாமி(60) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்நிலை யில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். மேலும், இந்த வெடி விபத்தால்,  கல்குவாரிக்கு அருகே உள்ள டி.கடம்பங் குளம் கிராமத்தில் சுமார் 50 வீடுகள் தேம டைந்துள்ளன. அங்குள்ள பள்ளிக்கூடம் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டடங்க ளும் பாதிப்படைந்துள்ளன. எனவே, சேதமடைந்த வீடுகளை பராமரிப்பு செய்திட உரிய நிதி வழங்க வேண்டும். மேலும், சட்டத்திற்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த தனியார் கல்குவாரியை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என பொது மக்க ளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அர்ஜீனன் வலியுறுத்தியுள்ளார்.


 

;