districts

img

விவசாயத்திற்கு 3 மணிநேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்குவதா?

மயிலாடுதுறை, ஏப்.30 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டக் குழு கூட்டம் சங்கத் தின் அலுவலகத்தில் மாவட்டத்  தலைவர் டி.சிம்சன் தலைமை யில் செவ்வாயன்று நடை பெற்றது.  சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் கலந்து  கொண்டார். மாவட்டச் செயலா ளர் எஸ்.துரைராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்  குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர். கூட்டத்தில், விவசாயி களின் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதித்த நிலையில் காவிரியின் கடை மடை பகுதியான மயிலாடு துறை மாவட்டத்தில் மேற்கொள் ளப்படும் 80 சதவீத விவசாயம் பம்புசெட் மூலமாகவே செய்யப் படுகிறது. இந்நிலையில் தற் போது குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளில் குறிப்பாக நாற்றங்கால் தயார்  செய்து விதைவிடும் பணிகள் நடைபெறுகின்றன.  ஆனால் விவசாயத்திற் கான மும்முனை மின்சாரம் ஒரு நாளைக்கு வெறும் 3  மணி நேரம் மட்டுமே வழங்கப் படுகிறது. அதுவும் எப்போது மின்சாரம் வரும், எப்போது வராது என்பது குறித்த எந்த உறுதியான அறிவிப்பும் இல்லை. இதனால் ஒவ்வொரு விவசாயியும் பம்புசெட் வாசலி லேயே நாள்தோறும் காத்துக் கிடக்கும் அவலம் நீடிக்கிறது. விதைத்த விதைகள் முளைவிட்டு தண்ணீர் இல்லா ததால் பல இடங்களில் கருகி  வரும் அதிர்ச்சியான செய்தி களும் வந்த வண்ணம் உள்ளன. மாவட்டம் முழுவதும்  சீரான மின்சாரம் கடந்த சில வாரங்களாக இல்லாததால் கிராமங்களில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மின் தடையால் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது.  எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியரும், மின்சார வாரியமும் உரிய நடவடிக்கை எடுத்து நாள்தோறும் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம்  வழங்கி விவசாயத்தை பாது காக்க வேண்டுமென தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.

 

;