districts

ஏப்.27, 28 தஞ்சாவூரில் நம்மாழ்வார் திருவிழா

தஞ்சாவூர், ஏப்.24 -  தஞ்சாவூரில் நம்மாழ்வார் மக்கள் இயக்கம்  சார்பில், நம்மாழ்வார் திருவிழா ஏப்ரல் 27, 28  ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து நம்மாழ்வார் மக்கள் இயக்க  ஒருங்கிணைப்பாளர் சி.மகேந்திரன் செய்தி யாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்ததாவது: பூமியில் பரவலாக மனித இனத்துக்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது. எனவே 21  ஆம் நூற்றாண்டின் மத்தியிலும், 22 ஆம் நூற்றாண்டிலும் என்னவாகும் என்ற நிலை  நிலவுகிறது. இதையெல்லாம் தொலை நோக்குடன் இயற்கை வேளாண் விஞ்ஞானி  நம்மாழ்வார் சிந்தித்து பல்வேறு கருத்து களைக் கூறினார். ரசாயன உரங்களால் நிலம்  சீர்கெட்டது மட்டுமல்லாமல், புற்றுநோய் பெருகியதற்குக் காரணம் என அவர் 30  ஆண்டுகளுக்கு முன்பு கூறியதை இப்போது  மக்கள் உணர்கின்றனர். நம்மாழ்வாரின் சிந்தனைகளையுடைய இளைஞர்களை ஒருங்கிணைத்து மக்கள்  நலனுக்கு விரோதமாக செயல்படுபவர் களை எதிர்த்து போராடுவதற்காக இந்த  இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அரசியல்  சார்பற்ற இந்த அமைப்பு மக்கள் இயக்க மாகச் செயல்படும். மக்களின் நீர், நிலம் காக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞர் அண்ணா நூற் றாண்டு அரங்கத்தில் நம்மாழ்வார் திருவிழா  ஏப்ரல் 27, 28 ஆம் தேதிகளில் நடத்தப்படு கிறது. இதில், பாரம்பரிய உணவுப் பொருள் கள் கொண்ட கண்காட்சியும் இடம்பெறு கிறது. மேலும் பேராசிரியர் க.பழனிதுரை, உலக  மக்கள் மாமன்றம் அசோக்குமார், சமூகச் செயற்பாட்டாளர் சுப.உதயகுமார், மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலர் கோ.பாலச்சந்திரன் உள்ளிட்டோர் பேசுகின்றனர். இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு சி.மகேந்திரன் தெரிவித்தார். அப்போது, சுற்றுச்சூழல் செயற்பாட்டா ளர் யாழினி தவச்செல்வன், வழக்குரைஞர் கவிமணி, கிரீன் நீடா ராஜவேலு, முகமது ரபீக்,  எம்.கே. ராம்பிரபு உள்ளிட்டோர் உடனிருந்த னர்.

;