districts

திருச்சி முக்கிய செய்திகள்

சட்ட விழிப்புணர்வு முகாம்

அரியலூர், மார்ச் 27- அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம், மணப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி மன்றத்தின் சார்பில் வட்ட சட்டப்பணிகள் குழு நடத்தும் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கான சட்ட உதவி மற்றும் சட்ட  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  முகாமிற்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.ஆக்னஸ் ஜெப கிருபா தலைமை வகித்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாது காப்பு சட்டங்கள், அடிப் படை சட்டங்கள் குறித்துப் பேசி, பொது மக்களுக்கு விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங் களை வழங்கினார். வழக் குரைஞர் சங்கத் தலை வர் காரல் மார்க்ஸ் பேசி னார். முன்னதாக மணப் பத்தூர் ஊராட்சித் தலை வர் லட்சுமி கணேசன் வர வேற்றார். 

பாபநாசம்

தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலத்தில் மாவட்ட சட்டப் பணிகள்  ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சித் தலை வர் பழனி, வழக்கறிஞர் சார்லஸ், தன்னார்வலர் ஜெகஜீவன்ராம் ஆகி யோர் இலவச சட்ட உதவி  மையத்தின் செயல்பாடு,  பெண்கள், குழந்தை களுக்கு நேரும் பிரச்ச னைகளுக்குரிய தீர்வு களை விளக்கினர்.

பருத்தி ஏலம்

பாபநாசம், மார்ச் 27 - தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாரம் பரிய நெல் ரகங்களுக் கான மறைமுக ஏலம் நடந்தது. கருப்பு கவுனி நெல் 17 மூட்டை கிலோ ஒன்றிற்கு ரூ.95, தங்க சம்பா 17 மூட்டை கிலோ ஒன்றிற்கு ரூ.33, சீரக சம்பா 11 மூட்டை கிலோ ஒன்றிற்கு ரூ.38, பருத்தி கிலோ ஒன்றிற்கு ரூ.76.09  என விலை போனது.

ஆவணங்கள் இல்லாத ரூ.1.93 லட்சம் பறிமுதல் 

தஞ்சாவூர், மார்ச் 27-  தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பேரா வூரணி சட்டமன்ற தொகுதி பகுதிகளில் பறக்கும் படை யினர் பட்டுக்கோட்டை சாலை, புதுக்கோட்டை சாலை, அறந்தாங்கி சாலை,  சேதுபாவாசத்திரம் சாலை ஆகிய பகுதிகளில் வாகனத்  தணிக்கை சோதனையில் ஈடுபட்டனர். தென்னங்குடி உக்கடை பகுதியில் வாகனத் தணிக் கையில் ஈடுபட்டிருந்த போது, அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன்  என்பவரால் உரிய ஆவணங் கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சத்து 93  ஆயிரத்து 410 ரூபாயை பறக் கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை பேரா வூரணி வட்டாட்சியர் அலுவ லகத்தில், உதவி தேர்தல்  நடத்தும் அலுவலர் பூஷண குமார் முன்னிலையில், வட்டாட்சியர் தெய்வா னையிடம் ஒப்படைத்தனர். அவற்றை உதவி தேர்தல்  நடத்தும் அதிகாரி கரு வூலத்தில் ஒப்படைத்தார்.

கரூர்: தேர்தல் தொடர்பான புகார்களை பொது பார்வையாளரிடம் தெரிவிக்கலாம்

கரூர், மார்ச் 27- 2024 மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக ராகுல் அசோக் ரெக்காவர், கரூர் மாவட்டத்திற்கு செவ்வாயன்று வந்தார். கரூர் தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க விரும்பினால், தேர்தல் பொது பார்வையாளரின் அலைபேசி எண்.9487118596-இல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் பொது பார்வையாளர் தங்கியுள்ள புகளூர் தெற்கு கிராமம், தமிழ்நாடு காகித ஆலை நிறுவன விருந்தினர் மாளிகை, பிளாக் எண்.3, அறை எண்.11-ல் தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நேரில் சந்தித்து புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும், செவ்வாயன்று புகளுர் தமிழ்நாடு காகித ஆலை நிறுவன விருந்தினர் மாளிகையில் தேர்தல் பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர், தேர்தல் நடத்தும் அலுவலர் மீ.தங்கவேலுவுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், விராலிமலை, மணப்பாறை மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பொய்ப்பிரச்சாரம் செய்த பாஜகவினரை விரட்டிய குளச்சல் மீனவர்கள்

நாகர்கோவில்,மார்ச் 27- கன்னியாகுமரி நாடாளு மன்ற தொகுதிக்கு உட்பட்ட குளச்சல் மீனவர்களை தூத்துக்குடியில் இருந்து திமுக தலைவர்கள் உதவி யுடன் நாடாளுமன்ற உறுப்பி னர் விஜய் வசந்த் மீட்டுக் கொண்டுவந்தார்.  ஆனால் மீட்டு வந்தது தாங்கள்தான் என பொய்ப்பிரச்சாரத்துடன் சென்ற பாஜகவினரை குளச் சல் மினவர்கள் மற்றும் மக்கள் விரட்டியடித்தனர். குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுக ளும், ஆயிரத்திற்கும் மேற் பட்ட பைபர் வள்ளம் கட்டு மரங்களும் பயன்படுத்தி மீன்பிடித்தொழிலில் ஈடு பட்டு வருகின்றனர். கடந்த 19 ஆம் தேதி தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித் ததாக குளச்சலைச் சேர்ந்த 5 விசைப்படகுகளில் இருந்த 73 மீனவர்களையும் ஒரு கேரள விசைப்படகையும், அதிலிருந்த 13 மீனவர்க ளையும் தூத்துக்குடி மீன வர்கள் சிறைப் பிடித்தனர். உடனடியாக குளச்சல் மீனவர்கள் தூத்துக்குடி மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக முடிவு ஏற்பட வில்லை. இதையடுத்து கடந்த ஞாயிறன்று (மார்ச் 24) கன்னியாகுமரி நாடாளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உடனடியாக மீன்வ ளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன், மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சி யர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரை நேரில் சென்று சந்தித்து,   கன்னியா குமரி மீனவர்களை தூத்துக் குடி மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தினார்.    அதைத்தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் திங்களன்று மதியம் குளச்சல் மீன்பிடித் துறைமுகம் வந்து சேர்ந்தனர். அவர்களை மீன வர்களின் குடும்பத்தினர் துறைமுகத்தில் வரவேற்ற னர்.  அப்போது பா.ஜ.க மீன வர் பிரிவு நிர்வாகிகளும் மீனவர்களை வரவேற்க சென்றனர். அப்போது மீன வர்கள், தூத்துக்குடியில் சிறைப்பிடிக்கப்பட்ட குளச்சல் மீனவர்களை விடு வித்ததில் கனிமொழி எம்.பி., மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி. ஆகி யோரின் முயற்சிகளை சுட்டிக்காட்டினர். ஆனால்  பா.ஜ.க உரிமை கொண் டாடி அரசியல் செய்யக் கூடாது என்று கூறி குளச்சல் மீனவர்கள் மற்றும் மக்கள்,  பா.ஜ.க. மீனவ பிரிவு நிர்வா கிகளை விரட்டியடித்தனர். தூத்துக்குடி மீனவர்க ளால் சிறைப்பிடிக்கப்பட்ட குளச்சல் மீனவரின் வீட்டிற்கு கன்னியாகுமரி நாடா ளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதா கிருஷ்ணன் சென்று குடும்பத்தினரை சந்தித்து பேசியதைத் தவிர பாஜக வின் பங்கு இதில் ஒன்று மில்லை என மீனவர்கள் தெரி வித்தனர். மீனவர்களின் வாக்குகளைப் பிரித்து ஆதா யம் அடைய திட்டமிடும் பாஜக முயற்சி வெற்றி பெறாது என்பதை இச்சம்பவம் தெளிவுபடுத்தி உள்ளது.

வாகன சோதனையில்  ரூ.3 லட்சம் பறிமுதல்

தேனி, மார்ச் 27- கூடலூர் அருகே லோயர்கேம்ப் காவல் சோதனை சாவடியில் நடை பெற்ற சோதனையில் கேரள மாநிலத்தை சேர்ந்த இருவரி டம் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர். ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லோயர் கேம்ப் காவல் சோதனை சாவடியில் திங்களன்று இரவு அந்த வழியே வந்த காரை சோதனை செய்த போது உரிய ஆவணமின்றி கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம்  எடக்கன்குளம் பகுதியை சேர்ந்தவரிடம் ரூ.2  லட்சமும், சங்கனாச் சேரி தாலுகா திருக்கொத்தாளம் பகுதியை சேர்ந்த நபரிடம் ரூ.1 லட்சமும் பறிமுதல் செய் யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் உத்தம பாளையம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

போலீஸ் தாக்குதலில் இறந்த  ஓட்டுநரின் உடல் அடக்கம்

தென்காசி, மார்ச் 27-  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வடக்கு புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் முருகன் மார்ச் 8 ஆம் தேதி அன்று காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு காவல்துறையினரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். ஆனால் காவல்துறை தரப்பில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது  இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தின. இதனால் உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது  இறந்த ஓட்டுநர் முருகனின் உடலை வாங்க மறுத்து அவரது கிராமத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஓட்டுநர் முருகனின் மனைவி மீனா, சிபிஎம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழிகாட்டுதலின்படி  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உடனடியாக சடலத்தை வாங்கி அடக்கம் அடக்கம் செய்யுங்கள். பிறகு தீர்ப்பு சொல்கிறேன் என்று அறிவுறுத்தினார். இதனால் மார்ச்  26 அன்று ஓட்டுநர் முருகன் உடல் வடக்கு புதூரில் அடக்கம் செய்யப்பட்டது.இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் அசோக்ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் கண்ணன், வட்டாரக்குழு உறுப்பினர் சி.கே.குமார் ,மாவட்ட குழு அலுவலக செயலாளர் முருகேசன் , தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

 

;