districts

img

தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவி 474 மதிப்பெண்!

கடலூர், மே 6- கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியை சேர்ந்தவர் ரத்தின வடி வேல். ஓய்வு பெற்ற சர்வேயர் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார். உயிரிழந்த ரத்தின வடிவேலுக்கு ராஜேஸ்வரி (16) என்ற மகள் உள்ளார். இவர் கடலூர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தந்தை இறந்ததால் மிகவும் துயரம் அடைந்த மாணவி கதறி அழுதார். வீட்டில் தந்தையின் உடல் அடக்கம் செய்யாமல் இருந்த நிலை யில், இயற்பியல் தேர்வு எழுது வதற்காக அவர் பள்ளிக்கு வந்தார். இதை பார்த்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி ஊக்க மளித்தனர்.  இதையடுத்து ராஜேஸ்வரி தேர்வு அறைக்கு சென்று தேர்வு எழுதினார். தேர்வு முடிந்ததும் ராஜேஸ்வரி வீட்டிற்கு சென்று தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். தந்தை இறந்த நிலை யில் மாணவி 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திங்கட்கிழமை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி யானது. இதில் மாணவி ராஜேஸ்வரி தந்தை இறந்த அன்று எழுதிய இயற்பி யல் தேர்வில் 70/100 மதிப் பெண்கள் எடுத்ததுடன் ஒட்டு மொத்தமாக 474 மதிப் பெண்கள் எடுத்துள்ளார். தன்னுடைய தந்தை ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தான் அது போன்று ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக ஆக வேண்டும் என்று எண்ணம் இருப்பதாகவும் தெரி வித்தார். மாணவி ராஜேஸ்வரி கராத்தேவில் 2  கருப்பு பட்டை பெற்றுள்ளார். தற்காப்பு கலையில் பல்வேறு கோப்பைகளையும் பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;