districts

img

சென்னையில் இன்று முதல் 7,500 வாகனங்களில் மளிகை பொருட்கள்

சென்னை, மே 30- பொதுமக்கள் தங்கள் ஏரியாவில் உள்ள கடைகளை தேர்ந்தெடுத்து தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் கடைக்காரர்கள் மளி கைப் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு வந்து தருவார்கள் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. அதையொட்டி ஞாயிற்றுக் கிழமை (மே 30) சென்னைமாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரி களுக்கான மளிகைபொருட்கள் விற்பனைக்கு டோக்கன் வினி யோகம் செய்யப்பட்டன. கொரோனா பரவலை தடுக்கும்  வகையில் தமிழக அரசு வருகிற 7ஆம் தேதி வரை முழு பொது முடக்கத்தை நீட்டித்துள்ளது. இந்நிலையில் பொது மக்க ளுக்குத் தேவையான மளிகை பொருட்களை உள்ளாட்சி அமைப்பு களின் அனுமதியுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடை வியாபாரிகள் தங்களது வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம்  திங்கட்கிழமை முதல் தெருத்தெரு வாக சென்று விற்பனை செய்ய அரசு  அனுமதி அளித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடு களுக்கு அருகே உள்ள கடைகளுக்கு  சென்று சீட்டு எழுதி கொடுத்து விட்டு  வந்து விடலாம் அல்லது செல்போன்  மூலமும் தேவையான மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்யலாம் கடைக்காரர்கள் இந்த பொருட் களை வீடுகளுக்கே சென்று வழங்குவ தற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது.  

காலை 7 மணி முதல் மாலை 6 மணி  வரை மளிகைப் பொருட்களை விநி யோகிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது இதற்காக சில்லரை வியாபாரி கள் தங்களுடைய கடைகளில் கூட்டம்  கூடுவதை தவிர்க்கும் பொருட்டு கடை களை முழுவதுமாக திறப்பதற்கு பதில் பக்கவாட்டு கதவு அல்லது பின்பக்க வாயிலாக பொருட்களை எடுத்து சென்று வாகனங்கள் மூலம்  பொதுமக்களுக்கு விற்பனை செய்ய லாம். கடைகளில் இருந்து பொதுமக்க ளுக்கு மளிகைப் பொருட்களை விநியோகிக்க மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் உரிமம் பெற்று கடை நடத்துபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி பகுதி களில் 7,500க்கும் மேற்பட்ட வியாபாரி கள் மாநகராட்சியில் உரிமம் பெற்று  கடை நடத்தி வருகின்றனர். இந்த  கடைக்காரர்களுக்கு மட்டும் இரு சக்கர வாகனங்களில் சென்று பொருட்களை விற்பனை செய்ய  மாநகராட்சியில் இருந்து ஞாயிற்றுக் கிழமை டோக்கன் வழங்கப்பட்டன.

டோக்கன் வாங்கிய கடைக் காரர்களின் தொலைபேசி எண்கள்  www.chennaicorporation.gov.in  என்ற மாநகராட்சியின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த கடைக்காரரின் கடை பெயர், அவரது பெயர், செல்போன், வாட்ஸ்- அப் நம்பர்கள் போன்ற முழு விவ ரங்களும் அந்த இணைய தளத்தில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் ஏரியாவில் உள்ள கடைகளை தேர்ந்தெடுத்து தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் கடைக்காரர்கள் மளி கைப் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு வந்து தருவார்கள் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது. நடமாடும் காய்கறி வண்டிகள் மூலம் தற்போது வீதிகளில் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இவர்களும் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய மாநகராட்சி அனு மதி அளித்துள்ளது. வீட்டு வாசலுக்கு சென்று பொருட் களை விற்பனை செய்யும்போது முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பொதுமக்களும், வியா பாரிகளும் நடந்து கொள்ள வேண்டும். நிபந்தனைகளை மீறுவோர் மீது பொது சுகாதார சட்டத்தின்கீழ் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த கடையின் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும்  சென்னை மாநகராட்சி ஆணை யாளர் ககன்தீப்சிங் பேடி தெரி வித்துள்ளார்.

;