districts

மின் மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் தையல் தொழிலாளர்கள் சங்க பேரவை வலியுறுத்தல்

சென்னை, ஏப். 10 - தையல் மின்மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டுமென்று தையல் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்சென்னை மற்றும் புறநகர் தையல் தொழிலாளர்கள் சங்கத்தின் முதலா மாண்டு பேரவை ஞாயிறன்று (ஏப்.9) கிண்டியில் நடைபெற்றது. இந்த பேரவையில், பெண்களுக்கு 55 வயதிலும், ஆண்களுக்கு 58 வயதிலும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக குறைந்தபட்சம் 3ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், நல  வாரிய பணப்பலன்களை முறையாக வழங்க வேண்டும், நலவாரிய பதிவை முறைப்படுத்தி, குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவைக்கு ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தையல் தொழிலாளர் சம்மேளன தலைவர் பி.சுந்தரம், சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பால கிருஷ்ணன், பொருளாளர் ஏ.நடராஜன், முறைசாரா சங்க மாவட்டச் செயலாளர் யு.அணில்குமார், தையல் சம்மேளன நிர்வாகி எஸ்.டி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர். மாவட்டத் தலைவராக தையல் ஜி.ராஜேந்திரன், பொதுச் செயலாளராக ஜி.ஜெயராமன், பொருளாளராக பி.சகா தேவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;